வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



பிளாஸ்டர் 

 

 

பிளாஸ்டர் என்பதன் பொருள் 

பிளாஸ்டர் என்பது சுவர்கள் மற்றும் கூரைகளுக்கு பூச, பாதுகாக்க மற்றும் அலங்கரிக்கப் பயன்படும் ஒரு கட்டுமானப் பொருள் ஆகும். இது ஒரு உலர்வான தூளாக தொடங்கி, தண்ணீருடன் கலக்கும்போது மிருதுவானதாக மாறி, மென்மையான, திடமான மேற்பரப்பாக கடினமாகிறது. பிளாஸ்டர் அதன் பன்முகத்தன்மைக்காகவும், அது பயன்படுத்தப்படும் பரப்புகளில் பலவிதமான தோற்றங்களை உருவாக்கி பல்வேறு கட்டமைப்புகளாக மாற்றியமைக்கப்படும் அதன் திறனுக்காகவும் பாராட்டப்படுகிறது. 

Plaster in Construction | UltraTech Cement

பிளாஸ்டர் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது 

பிளாஸ்டர் என்பது ஜிப்சம் என்னும் ஒரு இயற்கையான கனிமத்தை சுமார் 300°F (150°C) வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. கால்சினிங் என்று அழைக்கப்படுகிற இந்த செயல்முறையில், ஜிப்சமில் இருந்து தண்ணீர் நீக்கப்பட்டு, அது பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் எனப்படும் தூளாக மாற்றப்படுகிறது. இந்த தூளுடன் தண்ணீர் மீண்டும் சேர்க்கப்படும்போது, அது மீண்டும் நீரேற்றம் பெற்று கடினமாகிறது. சில பிளாஸ்டர் கலவைகளில் சுண்ணாம்பு அல்லது சிமெண்ட் சேர்க்கப்படுகிறது, இது வெவ்வேறு பயன்பாடுகளுக்கான நீடித்த நிலைத்தன்மையையும் வேலைத்திறனையும் அதிகரிக்கிறது. 

 

 

கட்டுமானத்தில் பிளாஸ்டரைப் பயன்படுத்தும் போது ஏற்படக்கூடிய சாத்தியமான சிக்கல்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது 

 

1. விரிசல்கள்: பிளாஸ்டர் காய்ந்தவுடன் அதில் விரிசல் ஏற்படலாம். இதைத் தடுக்க, பூசுவதற்கு முன் சுவர்கள் சுத்தமாகவும் தூசுகள் இல்லாமலும் இருப்பதை உறுதிசெய்து, பிளாஸ்டரை சீராக பூசி, அறையின் வெப்பநிலையையும் ஈரப்பதத்தையும் கட்டுப்படுத்தி அதன் உலரும் விகிதத்தைக் குறைக்கலாம். 

 

2. ஈரப்பதம்: ஈரப்பதமான சூழல்களில் அல்லது ஈரமான பரப்புகளில் பூசப்படும்போது பிளாஸ்டர் ஈரப்பதம் அடையலாம். இந்த சிக்கலைத் தவிர்க்க, பரப்புகள் உலர்ந்ததாகவும், அறை நன்கு காற்றோட்டமானதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். 

 

3. ஒட்டாத தன்மை: மென்மையான பரப்புகளில் பிளாஸ்டர் சரியாக ஒட்டாமல் போகலாம். ஒட்டும் திறனை மேம்படுத்த, மேற்பரப்பை மணல் காகிதத்தால் லேசாக தேய்த்து மென்மையற்றதாக்கலாம் அல்லது பிளாஸ்டருக்காக வடிவமைக்கப்பட்ட பாண்டிங் ஏஜென்ட்டைப் பயன்படுத்தலாம். 

 

4. சீரற்ற பூச்சுகள்: அனுபவமில்லாதவர்கள் பயன்படுத்தும்போது கட்டிகள் அல்லது சீரற்ற பூச்சுகள் உருவாகலாம். முதலில் ஒரு சிறிய, கவனிக்கப்படாத பகுதியில் பிளாஸ்டரிங் நுட்பங்களைப் பயிற்சி செய்து, மென்மையான பூச்சுகளைப் பெற பிளாஸ்டர்ஸ் ட்ராவல் போன்ற பொருத்தமான கருவிகளைப் பயன்படுத்தவும். 

 

 

கட்டுமானத்தில் பிளாஸ்டரைக் கொண்டு வேலை செய்ய கவனமும் ஆயத்தமும் தேவை. பிளாஸ்டர் என்றால் என்ன என்பதை ஆழமாகப் புரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் எந்தவொரு சாத்தியமான சிக்கல்களையும் குறைத்து, உங்கள் வீட்டின் உட்புற தோற்றத்தை மேம்படுத்தி, நீடித்து நிலைக்கும் அழகிய முடிவுகளைக் காணலாம். 


வீடு கட்டுபவர்கள் அறிய வேண்டியது என்ன

people with home

வீடு கட்டும் முறைகள் பற்றி மேலும் படிக்கவும்



வீட்டு கட்டுமானத்திற்கான             


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....