கோர்ஸ் அக்ரிகேட்களின் (பருஞ்சல்லியின்) வகைகள் யாவை?
கோர்ஸ் அக்ரிகேட்களின் (பருஞ்சல்லியின்) முக்கிய வகைகள் இதோ:
1. நொறுக்கப்பட்ட கல் அக்ரிகேட் (ஜல்லி)
2. கிராவல் அக்ரிகேட் (ஜல்லி)
3. மறுசுழற்சி செய்யப்பட்ட கான்கிரீட் அக்ரிகேட் (ஜல்லி)
4. விரிவுபடுத்தப்பட்ட களிமண் அக்ரிகேட் (ஜல்லி)
5. ஸ்லாக் அக்ரிகேட் (ஜல்லி)
உங்கள் வீட்டிற்கு கோர்ஸ் அக்ரிகேட்டைப் (பருஞ்சல்லியை) பயன்படுத்தும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை
உங்கள் வீட்டிற்கு, சரியான வகையான கோர்ஸ் அக்ரிகேட்டை (பருஞ்சல்லியை) தேர்ந்தெடுப்பது உங்கள் கட்டுமானத்தின் நிலைத்தன்மைக்கும் வலிமைக்கும் மிக முக்கியமானது. சில பயனுள்ள உதவிக்குறிப்புகள் இதோ:
- அளவு மற்றும் வடிவம்: ஆங்குலர் அக்ரிகேட்கள் (சாய்ந்த ஜல்லி) சிமென்ட்டுடன் சிறப்பாகப் பிணைந்து கான்கிரீட் வலிமையை மேம்படுத்துகின்றன. அதே சமயம் ரவுண்டட் அக்ரிகேட்கள் (உருளை ஜல்லி) கலக்க எளிதாக இருந்தாலும் குறைவான வலிமையையே வழங்கும்.
- அளவு மற்றும் வடிவம்: ஆங்குலர் அக்ரிகேட்கள் (சாய்ந்த ஜல்லி) சிமென்ட்டுடன் சிறப்பாகப் பிணைந்து கான்கிரீட் வலிமையை மேம்படுத்துகின்றன. அதே சமயம் ரவுண்டட் அக்ரிகேட்கள் (உருளை ஜல்லி) கலக்க எளிதாக இருந்தாலும் குறைவான வலிமையையே வழங்கும்.
தரம் மற்றும் தூய்மை: அக்ரிகேட்கள் (ஜல்லி) தூசு மற்றும் அசுத்தங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். தூய்மையற்ற அக்ரிகேட்கள் (ஜல்லி) கான்கிரீட் கலவையை பலவீனப்படுத்தி ஒட்டுமொத்த வலிமையையும் பாதிக்கும்.
- திட்டத்தின் தேவைகள்: தூண்கள் மற்றும் விட்டங்கள் போன்ற கனமான கட்டமைப்புகளுக்கு, நொறுக்கப்பட்ட கல் போன்ற வலிமையான அக்ரிகேட்களைத் (ஜல்லியை) தேர்ந்தெடுங்கள். லேசான திட்டங்களுக்கு, சரளைக் கல் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட அக்ரிகேட்கள் (ஜல்லி) போதுமானதாக இருக்கலாம்.
- நீரை உறிஞ்சுதல்: குறைந்த நீர் உறிஞ்சும் திறன் கொண்ட கோர்ஸ் அக்ரிகேட்கள் (பருஞ்சல்லி) நீர்-சிமென்ட் விகிதத்தைப் பராமரிக்க உதவி, கான்கிரீட்டின் வலிமையையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்துகின்றன.
- நிலைத்தன்மை: நீண்ட கால செயல்திறனைப் பெற, தேய்மானம், வானிலை பாதிப்பு மற்றும் இரசாயன எதிர்வினைகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட அக்ரிகேட்களைத் (ஜல்லியை) தேர்ந்தெடுக்கவும்.
கோர்ஸ் அக்ரிகேட்டைப் (பருஞ்சல்லியை) புரிந்துகொண்டு அதன் சரியான வகையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்கள் கட்டுமானத் திட்டம் வலிமையாகவும், நீண்ட காலம் நீடிப்பதாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும் என்பதை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.