கான்கிரீட்டின் வலிமையை என்னென்ன காரணிகள் பாதிக்கின்றன?
கட்டுமானத்தில் கான்கிரீட்டின் வலிமையை பாதிக்கும் பல முக்கிய காரணிகள் உள்ளன:
1. நீர்-சிமென்ட் விகிதம்: இது மிக முக்கியமான அம்சம். அதிகப்படியான நீர் கட்டமைப்பை பலவீனப்படுத்தக்கூடும் என்பதால், குறைவான விகிதம் வலுவான கான்கிரீட்டிற்கு வழிவகுக்கும்.
2. மூலப்பொருட்களின் தரம்: சுத்தமான, மாசற்ற தண்ணீர், மணல் மற்றும் ஜல்லியைப் பயன்படுத்துவது அதிக வலிமையை உறுதி செய்கிறது.
3. கலவையின் சீரான தன்மை: கட்டமைப்பு முழுவதும் சீரான வலிமையைப் பெற பொருட்களை துல்லியமாக கலப்பது அவசியம்.
4. கியூரிங் செயல்முறை: கான்கிரீட்டை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஈரப்பதமாக வைத்திருப்பதற்காக செய்யப்படும் போதுமான கியூரிங் செயல்முறையானது, அதன் வலிமையில் கணிசமான பங்கு வகிக்கிறது.
வீட்டுக் கட்டுமானத்தில் கான்கிரீட்டைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழிமுறைகள்
உங்கள் வீட்டு கட்டுமானத்தின் முடிவில் அது சிறப்பாக இருக்க, பின்வரும் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.
1. சரியான திட்டமிடல்: கலவையின் சீர்நிலையை உறுதிப்படுத்த, பொருட்களைத் துல்லியமாக அளவிட்டு மதிப்பிடுங்கள்.
2. தரமான பொருட்கள்: உயர்தர சிமென்ட், சுத்தமான, கூர்மையான மணல் மற்றும் ஜல்லியை மட்டுமே பயன்படுத்தவும்.
3. கலக்குதல்: ஒரே சீரான பதம் வரும்வரை நன்கு கலக்கவும்.
4. ஊற்றுதல் (போரிங்): முன்கூட்டியே உறைவதைத் தவிர்க்க, கான்கிரீட்டை கலந்தவுடனே தாமதமின்றி அச்சுகளில் ஊற்றவும்.
5. கியூரிங்: கான்கிரீட் சரியான வலிமையை அடைய குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு அதை ஈரப்பதமாக வைக்கவும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது, உங்கள் கான்கிரீட் முடிந்தவரை வலுவாக இருப்பதை உறுதிப்படுத்த உதவும். நீங்கள் கட்டுவது எதுவாக இருந்தாலும் அது நீண்ட காலம் நீடித்து நிற்க அதன் வலிமை அத்தியாவசியமானது.