Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost

Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence


கான்கிரீட் காம்பாக்ஷன் முறைகள்: வலுவான மற்றும் நீடித்து உழைக்கும் கட்டமைப்புகளை அடைவதற்கான ஒரு வழிகாட்டி

வலுவான மற்றும் நீடித்து உழைக்கும் கான்கிரீட் கட்டமைப்புகளை அடைவதென்பது சரியான காம்பாக்ஷனுடன் தொடங்குகிறது. திறன்மிக்க கான்கிரீட் காம்பாக்ஷனுக்கு அவசியமான நுட்பங்கள் மற்றும் கருவிகள் குறித்து இந்த முழுமையான வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

Share:


கான்கிரீட் என்பது அதன் வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்கு பெயர்போன முக்கியமான கட்டுமான பொருள் ஆகும். எனினும், இந்த விருப்பமான பண்புகளை உறுதி செய்ய, முறையான காம்பாக்ஷன் முக்கியமாகும். கான்கிரீட் காம்பாக்ஷன் என்பது காற்று வெற்றிடங்களை நீக்கி, கலவையின் வலிமையை அதிகரிக்கவும், கசியும் தன்மையைக் குறைக்கவும் கலவையை கன்ஸாலிடேட் செய்வதாகும். இந்த ப்ளாகில், அதை திறம்பட அடைவதற்கான பல்வேறு கான்கிரீட் காம்பாக்ஷன் முறைகள் மற்றும் நுட்பங்களை நாம் காண்போம்.



கான்கிரீட் காம்பாக்ஷன் என்றால் என்ன?


கான்கிரீட் காம்பாக்ஷன் என்பது புதிதாகப் போடப்பட்டுள்ள கான்கிரீட்டை கன்ஸாலிடேட் செய்வதன் மூலம் அதில் அடைந்துள்ள காற்றின் அளவைக் குறைக்கும் செயல்முறை ஆகும். இது வெற்றிடங்களை நீக்கி, அடர்த்தியை அதிகரித்து, அக்ரிகேட் மற்றும் சிமெண்ட் பேஸ்ட்டுக்கு இடையில் நல்ல பிணைப்பை ஊக்குவிப்பதன் மூலம் கான்கிரீட்டின் ஒட்டுமொத்த தரத்தையும் மேம்படுத்துகிறது. காம்பாக்ஷன், கான்கிரீட் கட்டமைப்புகளின் வலிமை, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் நீண்ட ஆயுளில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. சரியான காம்பாக்ஷனை அடைவதன் மூலம், உங்களால் கான்கிரீட்டின் வெவ்வேறு வகை விரிசல்களைத் தடுத்து அதன் ஒட்டுமொத்த ஆயுளை அதிகரிக்க முடியும்.

 

பல காம்பாக்ஷன் முறைகள் உள்ளன, அவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான நன்மைகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளன. பின்வரும் பிரிவுகளில் அவை ஒவ்வொன்றைக் குறித்தும் காண்போம்.


கான்கிரீட் காம்பாக்ஷனின் வகைகள்



1. மேனுவல் காம்பாக்ஷன் (ஹேண்ட் காம்பாக்ஷன்)

மேனுவல் காம்பாக்ஷன், கான்கிரீட்டின் ஹேண்ட் காம்பாக்ஷன் என்றும் அழைக்கப்படுகிறது, இது கான்கிரீட்டைக் காம்பாக்ட் செய்வதற்காக கையால் பயன்படுத்தக்கூடிய கருவிகளைப் பயன்படுத்தும் பணியாளர்களின் உடல் உழைப்பை உள்ளடக்கியதாகும். இந்த முறையில் டிரவெல்கள், டாம்பெர்கள் மற்றும் ராட்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. இது பெரிய அளவில் உள்ள காம்பாக்ஷன் கருவியை அணுக முடியாத சிறிய அளவிலான திட்டங்களுக்கு அல்லது பகுதிகளுக்கு ஏற்றதாகும்.

 

மேனுவல் காம்பாக்ஷனின் போது, பணியாளர்கள் காற்று வெற்றிடங்களை நீக்கி, நல்ல காம்பாக்ஷனை அடைய கான்கிரீட் கலவையை மீண்டும் மீண்டும் அழுத்துவது, டாம்ப் செய்வது மற்றும் அடிப்பதன் மூலம் அதில் கவனமாக வேலை செய்ய வேண்டும். திறமைமிக்க பணியாளர்களால் சிறிய இடங்களில் அல்லது சிக்கலான ரீயின்ஃபோர்ஸ்மெண்ட்டைச் சுற்றி கான்கிரீட்டைத் திறம்பட காம்பாக்ட் செய்ய முடியும். எனினும், மேனுவல் காம்பாக்ஷன் அதிக நேரம் எடுத்துக்கொள்ளலாம் மற்றும் சரியான காம்பாக்ஷனை உறுதி செய்ய அனுபவமிக்க பணியாளர்கள் தேவைப்படலாம்.

 

2. ஆழுத்தம் மற்றும் ஜோல்டிங் மூலம் செய்யப்படும் கான்கிரீட் காம்பாக்ஷன்

பொதுவாக ஆய்வக அமைப்புகளில் அல்லது ப்ரீகாஸ்ட் கான்கிரீட் உற்பத்தியில் அழுத்தம் மற்றும் ஜோல்ட்டிங் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையில், காற்று வெற்றிடத்தை நீக்கி சீரான அடர்த்தியை உறுதி செய்ய கான்கிரீட்டில் அழுத்தம் அல்லது இம்பாக்ட் லோட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வக அமைப்புகளில், காம்பாக்ஷன் அப்பாரடஸ் அல்லது காம்பாக்ஷன் ஃபாக்டர் அப்பாரடஸ் போன்ற தனித்துவமான கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த அப்பாரடஸ்கள் கான்கிரீட் மாதிரியில் அழுத்தம் தந்து, அதை காம்பாக்ட் செய்து, அதன் பண்புகளைத் துல்லியமாகச் சோதனை செய்ய மற்றும் பகுப்பாய்வு செய்ய அனுமதிக்கிறது.

 

ப்ரீகாஸ்ட் கான்கிரீட் உற்பத்தியில், ஜோல்ட்டிங் டேபிள்கள் அல்லது வைப்ரேட்டிங் டேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த டேபிள்களில் கான்கிரீட் வைக்கப்பட்டு, வேகமான செங்குத்து வைப்ரேஷன்கள் செலுத்தப்படும், இது கலவையைச் செட்டில் ஆகச் செய்து, அடைபட்டுள்ள காற்றை நீக்குகிறது. இந்த கான்கிரீட் காம்பாக்ஷன் முறை உகந்த வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்காக துல்லியமான காம்பாக்ஷன் தேவைப்படும் உயர் திறன் கொண்ட கான்கிரீட்டை உருவாக்குவதற்காக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

 

3. ஸ்பின்னிங் மூலம் செய்யப்படும் கான்கிரீட் காம்பாக்ஷன்

ஸ்பின்னிங் மூலம் செய்யப்படும் கான்கிரீட் காம்பாக்ஷன் என்பது சில பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் சிறப்பு நுட்பமாகும். உயர் திறன் வாய்ந்த கான்கிரீட்டை உற்பத்தி செய்யும் அதன் திறனானது, குழாய்கள், கம்பங்கள் போன்ற ப்ரீகாஸ்ட் கான்கிரீட் தயாரிப்புகளையும், மற்ற உருளை வடிவ பொருட்களையும் உற்பத்தி செய்வதில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது.

 

இந்த முறையில், கான்கிரீட் நிரப்பப்பட்ட மோல்டு அதிக வேகத்தில் சுழற்றப்பட்டும். ஸ்பின்னிங்கின் போது உருவாகும் மைய விலகு விசை அடைபட்டுள்ள காற்று வெற்றிடங்களை நீக்கி, கான்கிரீட்டைக் கன்ஸாலிடேட் செய்கிறது. இந்த கான்கிரீட் காம்பாக்ஷன் முறை சீரான அடர்த்தியை உறுதி செய்கிறது மற்றும் உயர் தரமான ப்ரீகாஸ்ட் பொருட்களை அடைய உதவுகிறது.

 

4. வைப்ரேஷன் மூலம் செய்யப்படும் கான்கிரீட் காம்பாக்ஷன்

கான்கிரீட் காம்பாக்ஷன் இயந்திரங்கள், அதுவும் குறிப்பாக மெக்கானிக்கல் வைப்ரேட்டர்கள், கான்கிரீட்டில் திறன்மிக்க காம்பாக்ஷனை அடைவதற்காக அதிகம் பயன்படுத்தப்படும் முறை ஆகும். நல்ல காம்பாக்ஷனுக்கு வழிவகுக்கும் வகையில், கான்கிரீட்டிற்கு வைப்ரேஷனை வழங்குவதற்காக மெக்கானிக்கல் வைப்ரேட்டர்களை இது பயன்படுத்துகிறது. எனினும், செல்ஃப் காம்பாக்ட்டிங் கான்கிரீட் அல்லது செல்ஃப் கன்ஸாலிடேட்டிங் கான்கிரீட் (SCC) போன்ற சில வகை திரவ கான்கிரீட் கலவைகளுக்கு வைப்ரேட்டர்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பது கவனிக்கத்தக்கது.



பலவகையான மெக்கானிக்கல் வைப்ரேட்டர்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றவையாகும், அவற்றில் சில பின்வருமாறு:

 

அ) நீடில் வைப்ரேட்டர்

இம்மெர்ஷன் அல்லது இன்ட்டர்னல் வைப்ரேட்டர்கள் என்றும் அழைக்கப்படும் இது, சுவர்கள், தூண்கள் மற்றும் பிற குறுகலான பிரிவுகளில் கான்கிரீட் காம்பாக்ட்டிங்கிற்காகப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வைப்ரேட்டர்கள் ஃப்ளெக்ஸிபிள் ஷாஃப்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ள வைப்ரேட்டிங் ஹெட்டைக் கொண்டிருக்கும். சீரான இடைவெளியில் கான்கிரீட்டிற்குள் வைப்ரேட்டிங் ஹெட் நுழைக்கப்படும், இது கலவையைத் திரவமாகச் செய்து, காற்று வெற்றிடங்களை நீக்கி, சீரான கான்கிரீட் காம்பாக்ஷனை அடைய உதவுகிறது.

 

ஆ) சர்ஃபேஸ் வைப்ரேட்டர்

அத்தகைய வைப்ரேட்டர்கள், ஸ்கிரீட் அல்லது பான் வைப்ரேட்டர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன, மேலும் இது கான்கிரீட் ஸ்லாப்கள், நடைபாதைகள் மற்றும் தட்டையான மேற்பரப்புகளில் கான்கிரீட்டைக் காம்பாக்ட் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு கான்கிரீட் காம்பாக்ஷன் முறை ஆகும். இந்த வைப்ரேட்டர்கள் கான்கிரீட்டின் மேற்பரப்பில் நகர்த்தப்பட்டு, அதை சமன் செய்கிறது மற்றும் அதே நேரத்தில் அதிகமாக உள்ள காற்று வெற்றிடங்களை நீக்குகிறது. சர்ஃபேஸ் வைப்ரேட்டர்கள் குறிப்பாக பெரிய கிடைமட்டமான மேற்பரப்புகளில் ஒரு சீரான ஃபினிஷை அடைவதில் திறன்மிக்கதாக உள்ளது.

 

இ) ஃபார்ம்வர்க் வைப்ரேட்டர்

ஃபார்ம்வர்க் வைப்ரேட்டர்கள் ஃபார்ம்வர்க்கில் கான்கிரீட்டை கன்ஸாலிடேட் செய்வதற்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எம்பெடெட் ரீயின்ஃபோர்ஸ்மெண்ட்டைச் சுற்றி சரியான கான்கிரீட் காம்பாக்ஷனை உறுதி செய்வதற்கும், சீரான மேற்பரப்பு ஃபினிஷை அடைவதற்கும் அவை பயன்படுத்தப்படுகின்றன. சுவர்கள், பீம்கள் மற்றும் தூண்கள் போன்ற உயர் தரமான கான்கிரீட் எலிமெண்ட்களுக்கு ஃபார்ம்வர்க் வைப்ரேட்டர்கள் அவசியமாகும்.

 

ஈ) டேபிள் வைப்ரேட்டர்

ப்ரீகாஸ்ட் பேனல்கள் அல்லது டைல்ஸ் போன்ற மெல்லிய கான்கிரீட் எலிமெண்ட்களைக் காம்பாக்ட் செய்ய டேபிள் வைப்ரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. கான்கிரீட் ஒரு வைப்ரேட் ஆகும் டேபிளில் வைக்கப்படும், இது மொத்த மேற்பரப்பிற்கும் வைப்ரேஷனை வழங்குகிறது. இந்த கான்கிரீட் காம்பாக்ஷன் முறையின் அசைவு, வெற்றிடங்களைத் திறம்பட நீக்கி, அடர்த்தியை மேம்படுத்தி, மெல்லிய பிரிவுகளில் வைப்ரேஷன் மூலம் கான்கிரீட்டின் சிறந்த காம்பாக்ஷனை உறுதி செய்கிறது.



சுருக்கமாகக் கூறினால், வலுவான மற்றும் நீடித்து உழைக்கும் கான்கிரீட் கட்டமைப்புகளை அடைவதில் கான்கிரீட் காம்பாக்ஷன் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. அடைபட்டுள்ள காற்று வெற்றிடங்களை நீக்கி, கலவையைக் கன்ஸாலிடேட் செய்வதன் மூலம், கான்கிரீட்டின் வலிமை, அடர்த்தி, மற்றும் நீர் ஊடுருவாத தன்மையைக் காம்பாக்ஷன் மேம்படுத்துகிறது. நீங்கள் மேனுவல் காம்பாக்ஷன், அழுத்தம் மற்றும் ஜோல்ட்டிங், ஸ்பின்னிங், அல்லது வைப்ரேஷன் பயன்படுத்தி செய்யப்படும் மெக்கானிக்கல் காம்பாக்ஷன் உள்ளிட்டவற்றில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும், சரியான நுட்பங்களைப் பின்பற்றுவதும் பொருத்தமான கருவியைப் பயன்படுத்துவதும் அவசியமாகும்.



உங்களின் கான்கிரீட் கட்டமைப்புகளின் நீண்ட ஆயுள் மற்றும் செயல்திறனை உறுதி செய்ய எப்படி காம்பாக்ஷன் செய்வது என்பது குறித்து மேலும் அறிந்துகொள்ள, கான்கிரீட் காம்பாக்ஷன் குறித்த ஒரு வீடியோ இதோ.



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....