கான்கிரீட்டின் இறுக்க வலிமையை எவ்வாறு சோதிப்பது

ஒரு வலுவான வீட்டைக் கட்டுவதற்கு சரியான கான்கிரீட் கலவை மிகவும் முக்கியம். அதனால்தான், கான்கிரீட் கலவையைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். எனவே, உறுதியான சோதனை செய்யப்பட வேண்டும். கான்கிரீட் சோதனை 2 வகைப்படும் - வார்ப்பதற்கு முன் மற்றும் அமைத்த பிறகு. கான்கிரீட்டின் இறுக்க வலிமை எவ்வாறு சோதிக்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வோம்.

 
 
1
கான்கிரீட் கெட்டியடைந்து மற்றும் உறுதியான பிறகு இந்த சோதனை செய்யப்படுகிறது.
2
இந்த சோதனையில், கான்கிரீட் க்யூப்ஸ் ஒரு சுருக்க சோதனை இயந்திரத்தில் சோதிக்கப்படும்.
3
150 மிமீ x 150 மிமீ x 150 மிமீ பரிமாணம் கொண்ட கான்கிரீட் கன சதுரம் இதில் பயன்படுத்தப்படுகிறது.
4
இது கான்கிரீட்டின் 3 அடுக்குகளால் நிரப்பப்பட்டு, ஒரு டேம்பிங் ராட் உதவியுடன் கெட்டிப்படுத்தப்பட்டிருக்கும்
5
மேல் மேற்பரப்பு ஒரு கொல்லறு கொண்டு சமன் செய்யப்படும் மற்றும் வார்க்கப்பட்ட இடம் ஒரு ஈரமான சணல் பையினால் மூடப்பட்டிருக்கும் மற்றும் கெட்டிப்படுவதற்காக 24 மணி நேரம் வரை அப்படியே விடப்படும்.
6
24 மணி நேரம் கழித்து, கனசதுரம் அச்சிலிருந்து அகற்றப்பட்டு 28 நாட்களுக்கு தண்ணீரில் பதப்படுத்தப்படும்.
7
கனசதுரத்தின் அளவு மற்றும் எடையை அளந்த பிறகு, அவை சோதிக்கப்படுகிறது.
8
சோதனை இயந்திரத்தின் தட்டுகள் மற்றும் கான்கிரீட் மேற்பரப்பு சுத்தம் செய்யப்பட்டு, தட்டுகளுக்கு இடையில் கன சதுரம் வைக்கப்படுகிறது.
9
பின்னர், கனசதுரம் உடைந்து போகும் வரை, எந்த சலனமும் இல்லாமல் படிப்படியாக அதன் மீது பளு வைத்து எடை சுமை அதிகரிக்கப்படுகிறது.
10
கான்கிரீட்டின் இறுக்க வலிமை அதிகபட்ச சுமைகளை பதிவு செய்வதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
 



கான்கிரீட்டின் இறுக்க சோதனை இம்முறையிலேயே நடைபெறுகிறது.









 தரமான கட்டுமானப் பொருட்கள் மற்றும் நிபுணத்துவ தீர்வுகளைப் பெற, உங்கள் அருகிலுள்ள அல்ட்ராடெக் பில்டிங் சொல்யூஷன்ஸ் ஸ்டோரை அணுகவும்.

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்