கட்டுமானத்தில் செங்கலின் வகைகள்
கட்டுமானத் துறையில், பல்வேறு வகையான செங்கற்கள் அவற்றின் பண்புகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நோக்கங்களுக்குப் பயன்படுகின்றன:
1. சூரியனில் உலர்த்தப்பட்ட செங்கல்
2. சுட்ட களிமண் செங்கல்
a) முதல் தர செங்கல்
b) இரண்டாம் தர செங்கல்
c) மூன்றாம் தர செங்கல்
d) நான்காம் தர செங்கல்
3. எரி சாம்பல் செங்கல்
4. கான்கிரீட் செங்கல்
5. இன்ஜினியரிங் செங்கல்
6. கால்சியம் சிலிக்கேட் செங்கல்
7. ஈக்கோ செங்கல்
உங்கள் கட்டுமான திட்டத்திற்கான சரியான செங்கலைத் தேர்வு செய்தல்
செங்கல் என்பதன் பொருள் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்து அறிந்துகொள்வதோடு நின்றுவிடாமல், உங்கள் கட்டுமான திட்டத்திற்கு உகந்த செங்கலைக் கண்டறிவதும் கட்டமைப்பின் தோற்றம் மற்றும் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமாக உள்ளது. உங்கள் தேர்வுக்கு வழிகாட்டும் சில உதவிக்குறிப்புகள் இதோ:
1. திட்டத்தின் தேவைகளை கண்டறியுங்கள்
உங்கள் திட்டத்துக்கு குறிப்பாக தேவைப்படுபவை எவை எனக்` கண்டறியுங்கள். அதிக வலிமையா? மேம்பட்ட பாதுகாப்புத் திறனா? அல்லது வெறும் தோற்றப் பொலிவா?
2. சுற்றுச்சூழலைக் கவனத்தில் கொள்ளுங்கள்
கட்டுமானத்திற்குப் பொருத்தமான செங்கல் வகையைத் தேர்வுசெய்வதில் உள்ளூர் காலநிலை பெரும் பங்கு வகிக்கிறது. சில செங்கற்கள் குறிப்பிட்ட வானிலை நிலைகளில் மற்றவற்றை விட சிறப்பாக செயல்படுகின்றன.
3. தரச் சரிபார்ப்பு
செங்கலின் தரத்தை எவ்வாறு சரிபார்ப்பது என்பதை அறிந்திருப்பது அவசியம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் செங்கல் தரமானதாகவும், நீண்ட காலம் உழைப்பதாகவும் இருப்பதை உறுதிசெய்ய எளிய சோதனைகளை மேற்கொள்ளுங்கள். ஒரு முழுமையான தரச் சரிபார்ப்பில், செங்கலின் சீரான தன்மை, தட்டிப் பார்க்கும்போது அதன் உறுதி, சேதமடைதல் மற்றும் நீர் உறிஞ்சலுக்கான அதன் எதிர்ப்புத்தன்மை போன்ற அம்சங்கள் அடங்கும்.
நினைவில் கொள்ளுங்கள், சரியான செங்கலைத் தேர்ந்தெடுப்பது உங்கள் கட்டுமானத் திட்டத்தின் நீடித்த உழைப்பையும், காட்சி அழகையும் கணிசமாக மேம்படுத்தும். அறிவார்ந்த முடிவை எடுப்பது, நீங்கள் ஞானமாக முதலீடு செய்வதை உறுதிசெய்து உங்கள் கட்டிடத்தின் கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் அழகியல் தரத்திற்கு பயனுள்ள வகையில் பங்களிக்கும்.