அல்ட்ராடெக் சிமெண்ட்

அல்ட்ராடெக் சிமென்ட் என்பது முழு கட்டுமானப் பொருட்களும் கிடைக்கும் இடமாகும். இது சாம்பல் சிமென்ட் முதல் வெள்ளை சிமென்ட் வரை, கட்டிட தயாரிப்புகள் முதல் கட்டிடத் தீர்வுகள் வரை மற்றும் பல்வேறு தேவைகள் மற்றும் பயன்பாடுகளைப் பூர்த்தி செய்யும் தயாநிலைக் கலவை கான்கிரீட் வகைகள் போன்ற பல தயாரிப்புகளை வழங்குகிறது.

 39 நகரங்களில் 100+ ரெடி மிக்ஸ் கான்கிரீட் (ஆர்.எம்.சி) ஆலைகளைக் கொண்ட அல்ட்ராடெக் இந்தியாவில் மிகப்பெரிய கான்கிரீட் உற்பத்தியாளராக உள்ளது. விவேகமான வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் தனித்தன்மை வாய்ந்த கான்கிரீட்டுகளும் இதில் உள்ளன.

அல்ட்ராடெக்கின் தயாரிப்புகளில் சாதாரண போர்ட்லேண்ட் சிமென்ட், போர்ட்லேண்ட் போசோலானா சிமென்ட் மற்றும் போர்ட்லேண்ட் வெடிப்பு-உலை ஸ்லாக் சிமென்ட் ஆகியவை அடங்கும்.

 

தயாரிப்பு சேவை

சாதாரண போர்ட்லேண்ட் சிமென்ட்

சாதாரண போர்ட்லேண்ட் சிமென்ட் என்பது பரவலான பயன்பாடுகளுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சிமென்ட் ஆகும். இந்த பயன்பாடுகள் சாதாரண, நிலையான, உயர் வலிமை கொண்ட கான்கிரீட், கொத்துவேலைக்கான மற்றும் பூச்சுவேலைக்கான தயாரிப்புகள், எ.கா., பிளாக்குகள், குழாய்கள் போன்றவற்றிற்கான முன்வார்ப்பு செய்யப்பட்ட கான்கிரீட் தயாரிப்புகள் மற்றும் முன்வார்ப்பு மற்றும் முன் அழுத்தம் செய்யப்பட்ட கான்கிரீட் போன்ற சிறப்புப் படைப்புகளை உள்ளடக்கியது.

சாதாரண போர்ட்லேண்ட் சிமென்ட்

போர்ட்லேண்ட் போசோலானா சிமென்ட்

போர்ட்லேண்ட் போசோலானா சிமென்ட் என்பது, சாம்பல் தூசி, கால்சியம் சேர்த்த களிமண், அரிசி உமி சாம்பல் போன்ற போஸோலனிக் பொருட்களுடன் நன்றாகக் கலந்த அல்லது ஒன்றுசேர்த்து அரைக்கப்பட்ட சாதாரண போர்ட்லேண்ட் சிமென்ட்டே ஆகும்.

போர்ட்லேண்ட் சிமென்ட் கிளிங்கர் என்பது போர்ட்லேண்ட் போசோலானா சிமென்ட்டை உற்பத்தி செய்ய சேர்க்கப்படும் போஸோலனிக் பொருட்களுடன் குறிப்பிட்ட அளவு ஜிப்சம் சேர்த்து ஒன்றில் அரைக்கப்பட்டு அல்லது நன்றாகக் கலக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. போஸோலனாக்களில் சிமென்டின் பண்புகள் காணப்படாது, ஆனால் சாதாரண வெப்பநிலையில் ஈரப்பதத்தில் கால்சியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து சிமென்டின் பண்புகளைக் கொண்ட சேர்மங்களை உருவாக்குகின்றன. போர்ட்லேண்ட் போசோலானா சிமென்ட்டைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கான்கிரீட் அதிக இறுதி வலிமையைக் கொண்டுள்ளது, நீடித்துழைப்பது, ஈர விரிசல், வெப்ப விரிசல் ஆகியவற்றை எதிர்க்கிறது மற்றும் கான்கிரீட் மற்றும் சாந்து ஆகியவற்றில் அதிக அளவு ஒத்திசைவு மற்றும் வேலைத்திறனைக் கொண்டுள்ளது.

போர்ட்லேண்ட் போசோலானா சிமென்ட்

அல்ட்ராடெக் பிரீமியம்

கனவு வீட்டைக் கட்டுவதற்கு முன், ஒவ்வொரு வீடு கட்டுபவரும் எதிர்பார்க்கும் நிபுணத்துவம் மற்றும் முழுமையை அல்ட்ராடெக் உணர்ந்திருக்கிறது. அல்ட்ராடெக் பிரீமியம் என்பது அல்ட்ராடெக் நிறுவனத்தில் இருந்து வழங்கப்படும் சமீபத்திய புரட்சிகரமான படைப்பாகும். உயர்-எதிர்வினை சிலிக்கா மற்றும் கசடு ஆகியவற்றின் உகந்த கலவையுடன், இது உங்கள் வீட்டிற்கு ஆயுள், வலிமை மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. வானிலையின் கடினமான நிலை முதற்கொண்டு அரிப்பு மற்றும் சுருக்கம், விரிசல் வரை அல்ட்ராடெக் பிரீமியம் உங்கள் வீட்டைப் பாதுகாக்கிறது. அதன் மிகவும் பொறிநுட்பமாக்கப்பட்ட துகள்களின் பரந்து செல்லும் தன்மை கான்கிரீட்டிற்கு உண்மையான மதிப்பைச் சேர்த்து அதை அடர்த்தியானதாகவும், அழிக்க முடியாததாகவும் மாற்றுகிறது.

ஐரோப்பியா மற்றும் இலங்கையின் தரக் குறிப்பீடுகளுக்கு சிமென்ட் இணக்கமாக உள்ளது

அல்ட்ராடெக்கின் மொத்த சிமென்ட் முனையம் இலங்கை நாட்டின் கொழும்பில் அமைந்துள்ளது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, சுயமாக வெளியேற்றும் மொத்த சிமென்ட் கேரியர்களால் சிமென்ட் பெறப்படுகிறது. பின்னர் துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப்படும் சிமென்ட் துறைமுகத்தில் இருந்து சாலை வழியாக வாகனம் மூலம் 10 கி.மீ தூரத்தில் இருக்கும் முனையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. 4 x 7500 டி சிமென்ட் கான்கிரீட் குழிகளில் சிமென்ட் சேமிக்கப்படுகிறது. ஒரு அதிநவீன மொத்த சிமென்ட் முனையம் (இது அனைத்து சுற்றுச்சூழல் விதிமுறைகளையும் கடைபிடிக்கிறது) சிமென்டை மொத்தமாக ஆர்.எம்.சி மற்றும் கல்நார் ஆலைகளுக்கு அனுப்புகிறது. முனையத்தில் ஒரு நவீன இத்தாலிய தயாரிப்பான வென்டோமேடிக் பாக்கர் உள்ளது. இது தீவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக 50 கிலோ காகிதப் பைகளில் சிமென்ட்டைப் பேக் செய்கிறது. 

சிமென்டில் அதன் கூர்மையான கவனத்தை செலுத்தி வரும் ஆதித்தியா பிர்லா குழு, வட்டார ஒத்துழைப்புக்காக உலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு இடையில் ஒரே விதமான ஏற்பாடுகளில் எப்போதும் நம்பிக்கை கொண்டு, குழுவும் அருகிலுள்ள நாடுகளில் தன் உற்பத்தி வசதிகளை நிறுவி அந்தந்த நாடுகளில் சிமென்ட் உற்பத்தியாளராகத் திகழவேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு அருகில் உள்ள இரு நாடுகளில் சிமென்டுக்கான அடிப்படை மூலப்பொருளான சுண்ணாம்புக்கல்லின் வரையறுக்கப்பட்ட படிவுகள் இருக்கின்றன. இந்த இரண்டும் உள்நாட்டு கட்டுமான வேலைகளுக்காக இறக்குமதியை நம்பியுள்ளன. இந்தச் சூழலில்தான் ஸ்ரீலங்கா நாட்டின் கொழும்புவில் மொத்த சிமென்ட் முனையம் கூட்டு முயற்சியாக நிறுவப்பட்டது.

குஜராத் சிமென்ட் ஒர்க்சிடம் (ஜி.சி.டபிள்யூ) ஏற்றுமதிக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கேப்டிவ் ஜெட்டி உள்ளது. அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளாக, இலங்கையில் குழுவின் கூட்டு நிறுவனமான (ஜே.வி) ஜி.சி.டபிள்யூவிலிருந்து அல்ட்ராடெக் சிமென்ட் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு மொத்த சிமென்ட் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தரமான தயாரிப்புகளை வழங்கி ஸ்ரீலங்காவின் சிமென்ட் தேவைகளை அல்ட்ராசிமென்ட் நிறைவுசெய்து வருகிறது. சிமென்டை சந்தைப்படுத்தும் தகுதி வாய்ந்த களப் பணியாளர்களும் தளத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும் தொழிநுட்பப் பிரிவின் தகுதிபெற்ற பொறியாளர்களும் இணைந்து அளிக்கும் தரமான சேவைகளை நிறுவனத்தின் வாடிக்கையாளர் தளம் அங்கீகரித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் இருவர் உட்பட பன்னாட்டு போட்டியாளர்களுடன் கடுமையான போட்டி நிலவும் சந்தையில் கணிசமான சந்தை பங்கை அடைய இந்த அங்கீகாரம் நிறுவனத்திற்கு உதவியுள்ளது. இந்த போட்டிச் சூழலில், நிறுவனத்தின் வாடிக்கையாளர் தளம் அதற்கு பிராண்ட் ஈக்விட்டி அளித்து, தீவில் பிரீமியம் தரமான சிமென்ட் சப்ளையர் என்று ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் வாசிக்கவும்
Cement complying with European and Sri Lankan standard specifications

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்