வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முயற்சியில், கட்டிடப் பொருட்கள் அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்குமாறு, அல்ட்ராடெக் சிமென்ட் அல்ட்ராடெக் கட்டிட தயாரிப்புகள் பிரிவை நிறுவியுள்ளது. அல்ட்ராடெக் கட்டிட தயாரிப்புகள் பிரிவு கட்டுமான மற்றும் உள்கட்டமைப்புத் தொழிலுக்குத் தொழில்நுட்ப ரீதியாக மறு வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை தயாரித்து சந்தைப்படுத்துகிறது.
விரைவான கட்டுமானத்திற்காக இன்று கட்டுமானத் தொழிலுக்கு மரபான தயாரிப்புகளை மட்டுமல்லாமல் மரபுவழி முறைகளையும் மாற்றும் தயாரிப்புகள் தேவைப்படுகின்றன. இந்த சவாலான தேவையை நிறைவுசெய்வதற்காக இது முழு கட்டுமானத் தேவைகளையும் உள்ளடக்கிய முழுமையான தீர்வுகளை அளிக்கிறது.
தயாரிப்பு வரம்பில் அடங்குவன: ஓடுகள், பசைகள் (டைல்ஃபிக்சோ-சிடி, டைல்ஃபிக்சோ-விடி, டைல்ஃபிக்சோ-என்டி மற்றும் டைல்ஃபிக்சோ-ஒய்டி), பழுதுபார்ப்பு தயாரிப்புகள் (மைக்ரோகிரீட் மற்றும் பேஸ்கிரீட்), நீர்க்கசிவுக் காப்பு தயாரிப்புகள் (சீல் & டிரை, ஃப்ளெக்ஸ், ஹைஃப்ளெக்ஸ் மற்றும் மைக்ரோஃபில்), தொழில்துறை மற்றும் துல்லிய புரைஅடைப்புகள் (பவர்கிரௌட் என்எஸ்1, என்எஸ் 2 மற்றும் என்எஸ்3), பிளாஸ்டர்கள் (ரெடிபிளாஸ்ட், சூப்பர் ஸ்டக்கோ), கொத்துவேலை தயாரிப்புகள் (ஃபிக்சோபிளாக்), இலகு ரக ஆட்டோகிளேவ்ட் ஏரேட்டட் கான்கிரீட் பிளாக் (எக்ஸ்ட்ராலைட்)
அல்ட்ராடெக் டைல்ஃபிக்ஸோ என்பது ஓடுகள், சுவர்கள் மற்றும் தளங்களுக்கு மேல் இயற்கைக் கற்களைப் பொருத்துவதற்காக, உயர் செயல்திறனும், உயர் வலிமையும் கொண்டு உருவாக்கப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட பாலிமர் மற்றும் சிமென்ட் அடிப்படையிலான உயர்தர பிசின். உட்புற மற்றும் வெளிப்புற, மெல்லிய சாந்து பயன்பாடுகளுக்கு ஏற்றது. வெவ்வேறு பயன்பாட்டிற்கான டைல்பிக்சோவின் நான்கு மாறுபட்ட வகைகள் உள்ளன.
பழுதுபார்ப்பும் கட்டமைப்பு வலிமையாக்கமும் தேவைப்படும் பலவீனமான தூண்கள், பீம்கள் மற்றும் மிகவும் ஓட்டை விழுந்த கூரைகளைப் பழுதுபார்க்க பாலிமர் செறிந்த அதிக உரம்வாய்ந்த பழுதுபார்ப்பு சாந்து மற்றும் நுண் கான்கிரீட்.
உள் மற்றும் வெளிப்புற இடங்களில் தரை ஓடு பதிக்க அடியில் இடுவதற்கான பன்நோக்கு தரைத்தளங்கள். செங்கல் துண்டு கோபா பயன்பாடு இல்லாமல் மழை நீரை வடிப்பதற்கு நீர்க்காப்பு பொருட்களுக்கு மேல் ஒற்றை அல்லது இரட்டை பாகமாக கான்கிரீட் கூரையின் மேல் அதிக தடிமனுக்காக சரிவு அமைப்பதற்கு வலியுறுத்தி பரிந்துரைக்கப்படுகிறது.
மட்டக் கூரை கான்கிரீட், சமையலறை பால்கனிகள், சஜ்ஜாக்கள், சாய்வு கூரைகள் மற்றும் குளியல் அறைகள், கால்வாய் லைனிங், நீச்சல் குளங்கள் ,நீர் தொட்டிகள் போன்ற ஈரமான பகுதிகளில் தேவைப்படும் பயன்பாட்டிற்கான ஒற்றை அல்லது இரட்டைக் கூறு அடித்தளமிடும் நீர்க்காப்புப் பொருட்களாக பாலிமர் / மாற்றியமைக்கப்பட்ட கோ பாலிமர் / அக்ரிலிக் / எஸ்.பி.ஆர் லேடெக்ஸ் சேர்க்கை போன்றவற்றின் பரந்துபட்ட வரம்பு.
இயந்திர அடித்தளம், முன்வார்ப்புக் கூறுகளை இணைத்தல், உயர் செயல்திறன் பாதுகாப்பு வால்ட்ஸ் போன்ற பரந்துபட்ட வகையான பயன்பாடுகளுக்கான விரிவாக்க முடியாத உயர் செயல்திறன் கொண்ட தொழில்துறை குழம்புகள்,
உள் மற்றும் வெளிப்புற சுவர்களுக்கான மெல்லிய மற்றும் அடர்த்தியான பூச்சுப் பயன்பாட்டிற்கான மாற்றியமைக்கப்பட்ட பாலிமர் மேற்பரப்பு நேர்த்திக்கான பூச்சுக்கள்
ஏஏசி பிளாக், சாம்பல் தூசி செங்கற்கள் மற்றும் கான்கிரீட் பிளாக்குகளுக்கான மெல்லிய பூச்சு இணைக்கும் பொருள்
கொத்துவேலைக் கட்டுமானத்திற்கான குறைந்த எடை பிளாக்
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…