பெயிண்ட் செய்த பிறகு சிறப்பான முடிவுகளைப் பெறுவதற்கு இந்த உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்தவும்

ஆகஸ்ட் 25, 2020

பெயிண்ட் செய்யும் கட்டம், உங்கள் வீட்டின் கட்டுமானத்தின் போது இறுதி கட்டங்களில் ஒன்றாகும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெயிண்ட், உங்கள் வீட்டின் அழகை வெளிக்கொண்டு வரும். பெயிண்டை மாற்றலாம் மற்றும் மீண்டும் பூசலாம் என்றாலும், அதற்கு நேரமும் பணமும் செலவாகும்; அதனால்தான் அதை முதல் முறையிலேயே சரியானதாகப் பெறுவதற்கு அது பணம் செலுத்துகிறது.

பெயிண்ட் செய்யும் செயல்முறைக்கு முன்பும், பெயிண்ட் செய்யும் போதும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டியது இதோ.

  • நிறத்தைத் தேர்ந்தெடுக்கும் போது, உங்கள் வீட்டின் உட்புற மற்றும் வெளிப்புறச் சுவர்கள் இரண்டையும் கருத்தில் கொள்ளவும்.
  • பெயிண்ட் மற்றும் பெயிண்ட் சம்மந்தமான பொருட்களை மொத்தமாக வாங்குவது மிகவும் சிக்கனமானது என்பதை மனதில் கொள்ளவும். உங்கள் வீட்டிற்குத் தேவையான பெயிண்டின் அளவு குறித்து உங்களின் ஒப்பந்ததாரரிடம் கலந்தாலோசிப்பதை நினைவில் கொள்ளவும்.
  • நீங்கள் பெயிண்ட் செய்யத் தொடங்குவதற்கு முன்பு, சுவர்களில் விரிசல்கள் மற்றும் வெடிப்புகள் உள்ளதா என்று சரிபார்க்கவும். அவற்றை நிரப்பிகளைப் பயன்படுத்தி நிரப்பவும், பின்னர் அந்த மேற்பரப்பைச் சாண்ட்பேப்பரைப் பயன்படுத்திச் சுத்தம் செய்யவும்.
  • கழுவக்கூடிய பெயிண்ட்களை உட்புறச் சுவர்களுக்குப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும். மீண்டும் மீண்டும் பெயிண்ட் செய்யும் செலவை இது மிச்சப்படுத்தும்.
  • இறுதியாக, உங்கள் வீட்டிற்கான சிறந்த தோற்றத்தைப் பெற வேண்டும் என்று நீங்கள் உண்மையாகவே விரும்பினால், ஒரு உட்புற வடிவமைப்பாளரிடம் கலந்தாலோசிக்கவும்.

இந்தக் குறிப்புகளைப் பின்பற்றவும், உங்களின் பெயிண்ட் செய்யும் செயல்முறை சீராகா நடைபெற்று, அதன் விளைவாக ஒரு சிறப்பான பூச்சை நீங்கள் பெறுவீர்கள்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்