rcc புட்டிங் என்றால் என்ன?

ஆகஸ்ட் 25, 2020

உங்கள் வீடு பல ஆண்டுகளுக்கு உறுதியாக இருக்க வேண்டும், ஏனெனில் அது உங்களின் எதிர்காலத் தலைமுறைகளுக்குமான வீடாக உள்ளது. இதை அடைவதற்கு, ஒரு வலுவான அடித்தளம் தேவைப்படும், மேலும், ஒரு தளத்தை வலுப்படுத்துவதற்கான சிறந்த வழி RCC ஃபூட்டிங்ஸ் ஆகும்.

RCC ஃபூட்டிங்ஸ் என்றால் என்ன?

அவை வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் (RCC) ஃபூட்டிங்ஸ் ஆகும், மேலும் அவை கான்கிரீட் அடித்தளத்திற்கு வலுவூட்டும் ஸ்டீல் கம்பிகளால் ஆனது, வீட்டின் ஒட்டுமொத்த எடையையும் அது தாங்குகிறது. ஃபூட்டிங்ஸ், ஒட்டுமொத்த எடையையும் நிலத்திற்கு மாற்றம் செய்து, உங்கள் வீட்டின் கட்டமைப்பு மீதான சுமையைக் குறைக்கிறது. கட்டமைப்பின் தேவைகளைப் பொறுத்து, ஃபூட்டிங்ஸ் சரிவக வடிவில், ப்ளாக் வடிவில் அல்லது படி-வடிவில் இருக்கலாம்.

RCC ஃபூட்டிங்ஸை அமைப்பதற்கான படிநிலைகள் என்ன?

  • ஃபூட்டிங்கை அமைப்பதற்கு முன்பு, அதற்காகத் தோண்டப்பட்ட நிலத்தை அடித்துக் கெட்டியாக்கவும். இது மண்ணின் வலிமை மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்கும்.
  • அதன் பிறகு, அந்த இடத்தை 150 மிமீ கான்கிரீட்டால் மூடவும், இதன் மூலம் ஒரு காரை அடியடுக்கு உருவாக்கப்படுகிறது. இது உங்கள் ஃபூட்டிங்கிற்கு ஒரு சமமான மேற்பரப்பை வழங்கும்.
  • வலுவூட்டல் கூண்டைப் பொருத்தும் போது, அது நேராக இருப்பதை உறுதி செய்யவும்.
  • நீர்மக்குழம்பைப் பூசிய பின்னர் அந்தச் சிமெண்ட் அடியடுக்கின் மீது கான்கிரீட்டை ஊற்றவும். பயன்படுத்தப்படும் கான்கிரீட்டின் அளவு அடித்தளத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டது என்பதை உறுதி செய்துகொள்ளவும், ஷட்டர் அமைப்பதற்கு மறக்க வேண்டாம்.
  • இறுதியாக, ஃபூட்டிங் செட்டானவுடன் அதில் தண்ணீர் ஊற்ற மறக்க வேண்டாம். விரிவான வலிமையைக் கட்டமைப்பதற்கு இது அவசியமாகும்.

உங்கள் வீட்டிற்கான RCC ஃபூட்டிங்ஸ் சரியான முறையில் நிறுவப்பட்டுள்ளதா என்று உறுதி செய்ய இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்