வலுவான செங்கற்கள் வலுவான சுவர்களை உருவாக்குகின்றன, இதன் விளைவாக நீங்கள் ஒரு வீட்டைக் கட்டும் போது அது நல்ல கட்டமைப்பு வலிமையைப் பெறுகிறது.
நீங்கள் இரண்டு செங்கற்களை ஒன்றாகத் தட்டும்போது, நீங்கள் 'க்ளிங்' என்ற உலோக ஒலியைக் கேட்பீர்கள். நல்ல தரத்திலான செங்கற்கள் தாக்கத்தின் போது உடையவோ அல்லது விரிசல் அடையவோ கூடாது. திடீர்த் தாக்கத்திற்கு எதிராகச் செங்கல்லின் உறுதியைத் தீர்மானிக்க இந்தச் சோதனை பயன்படுத்தப்படுகிறது.
இது செங்கல்லின் உறுதியைச் சோதிப்பதற்கான மற்றொரு முறை ஆகும். ஒரு செங்கல்லை 4 அடி உயரத்திலிருந்து கீழே போடும் போது உடையவோ விரிசல் விடவோ கூடாது.
ஒவ்வொரு செங்கல்லையும் ஆய்வு செய்து, அவை எந்தவொரு விரிசல்களுமின்றி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் சமதளமாகவும், விளிம்புகளில் சீராகவும் இருப்பதை உறுதி செய்யவும். அவை அனைத்தும் சீரான வடிவத்திலும் அளவிலும் இருக்க வேண்டும். இதைச் சரிபார்ப்பதற்கான சிறந்த வழி அனைத்துச் செங்கற்களையும் ஒன்றாக அடுக்குவதாகும்.
ஒரு செங்கல்லின் ஈரப்பதத்தை உறிஞ்சும் விகிதத்தை இந்தச் சோதனை கண்டறியும். உலர் நிலையில் உள்ள செங்கல்லை எடை போட்டு அதன் எடையைக் குறித்துக்கொள்ளவும், பின்னர் அந்தச் செங்கல்லை நீண்ட நேரத்திற்குத் தண்ணீரில் அமிழ்த்தி வைக்கவும். அதை வெளியே எடுத்து மீண்டும் எடை பார்க்கவும்; எடை 15% அதிகரிக்கவில்லை என்றால் அது நல்ல தரமானதாகும்
உங்கள் வீட்டில் விரிசல் ஏற்படாமல் இருக்க உங்கள் வீட்டைக் கட்டும் போது குணப்படுத்துவதற்கான சில குறிப்புகள் இவை. மேலும் இதுபோன்ற குறிப்புகளுக்கு, பார்வையிடவும் www.ultratechcement.com
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…