உங்கள் வீட்டைக் கட்டத் திட்டமிடும் போது, மாறிவரும் பருவ காலநிலையை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். குளிர்காலம் ஒரு வீட்டைக் கட்டுவதற்கு மிகவும் சாதகமான பருவங்களில் ஒன்றாக இருக்கும் என்றாலும், குளிர்காலத்தில் மேற்கொள்ளும் கட்டுமானத்தைப் பற்றிய சில முக்கியமான விஷயங்களைப் புரிந்துகொள்வோம்.
குளிர்காலத்தில் மழையோ, சுட்டெரிக்கும் வெப்பமோ இல்லாததால் கட்டுமானப் பணிகள் சீராக நடைபெறும்.
வெப்பநிலை குறையும் போது, கான்கிரீட் அமைக்க அதிக நேரம் எடுக்கும் மற்றும் அதன் உறுதித்தன்மை அடையும் நேரம் மெதுவாக இருக்கும்.
எனவே, போதுமான சூரிய ஒளி இருக்கும் போது கான்கிரீட் கலக்க வேண்டும். கலக்க வெதுவெதுப்பான நீரையும் பயன்படுத்தலாம்.
உறைபனியிலிருந்து பாதுகாக்க, கான்கிரீட்டை தார்பாலின் அல்லது பிளாஸ்டிக் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
கட்டுமான பொறியாளரின் மேற்பார்வையின் கீழ் நீங்கள் கலவைகளைப் பயன்படுத்தலாம்
குளிர்காலத்தில் உறுதித்தன்மை மெதுவாக அதிகரிப்பதால், பின்வரும் அட்டவணையின்படி ஷட்டரிங் அகற்றப்பட வேண்டும்: விட்டம், சுவர்கள் மற்றும் தூண்கள் - 5 நாட்களுக்குப் பிறகு, ஸ்லாப்புகளுக்கு கீழே உள்ள முட்டு - 7 நாட்களுக்குப் பிறகு, ஸ்லாப் - 14 நாட்களுக்குப் பிறகு, தூண்கள் - 21 நாட்களுக்குப் பிறகு .
மேலும் நிபுணத்துவம் வாய்ந்த வீடு கட்டும் தீர்வுகள் மற்றும் உதவிக்குறிப்புகளுக்கு, அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தை #வீட்டைப் பற்றிய பேச்சு எனும் ஹேஸ்டேக் வழியாக பின்பற்றவும்
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…