ஏஏசி பிளாக்ஸ் எதனால் தயாரிக்கப்படுகின்றன?
ஏஏசி பிளாக்ஸ் சிமெண்ட், சுண்ணாம்பு, தண்ணீர் மற்றும் குறைந்த அளவு அலுமினியப் பொடி ஆகியவற்றின் கலவையால் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கலவை மில்லியன் கணக்கான சிறிய, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத காற்றுப் பைகளைக் கொண்ட ஒரு செல் கட்டமைப்பை உருவாக்குகிறது. இதனால், அதிக வெப்ப தடுப்பு மதிப்பீட்டை இது கொண்டுள்ளது.
ஏஏசி பிளாக்ஸின் வகைகள்
பல வகையான ஏஏசி பிளாக்ஸ் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு கட்டுமானத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தனித்துவமான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
1. நிலையான ஏஏசி பிளாக்ஸ்(ஸ்டாண்டர்ட் AAC ப்ளாக்ஸ்)
2. தீ தடுப்பு ஏஏசி பிளாக்ஸ் (ஃபயர் ரெசிஸ்டன்ட் ஏஏசி பிளாக்ஸ்)
3. 200 மிமீ ஏஏசி பிளாக்ஸ்
4. 100 மிமீ ஏஏசி பிளாக்ஸ்
5. நீடித்து உழைக்கும் ஏஏசி பிளாக்ஸ். (லாங்-லாஸ்டிங் ஏஏசி பிளாக்ஸ்)
6. செவ்வக வடிவிலான எரி சாம்பல் ஏஏசி பிளாக்ஸ்(ரெக்டாங்குலர் ஃப்ளை ஆஷ் ஏஏசி பிளாக்ஸ்)
வீடு கட்டுபவர்கள் ஏஏசி பிளாக்ஸை எப்போது பயன்படுத்தலாம்?
பின்வரும் சூழ்நிலைகளில் ஏஏசி பிளாக்ஸைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்:
1. ஏஏசி பிளாக்ஸ், நீடித்து உழைப்பதாகவும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாகவும் இருப்பதன் காரணமாக அனைத்து வகையான குடியிருப்பு கட்டுமானத்திற்கும் ஏற்றவை என்பதால், உங்கள் கனவு வீட்டைக் கட்ட அவற்றைப் பயன்படுத்தலாம்.
2. உங்கள் கார்பன் தடயத்தைக் குறைக்க வேண்டும் என்பதே உங்கள் இலக்காக இருந்தால், பசுமைக் கட்டுமானப் பொருட்களாக இருக்கும் ஏஏசி பிளாக்ஸ் அதற்கு சரியாகப் பொருந்தும்.
3. கடுமையான காலநிலைகளில், ஏஏசி பிளாக்ஸின் அதிக வெப்ப தடுப்பு மதிப்பீடு காரணமாக, அவற்றால் இதமான உட்புற வெப்பநிலையை பராமரிக்க முடியும்.
4. உங்கள் வடிவமைப்பு தோட்டக் கொட்டகைகள் அல்லது கேரேஜ்கள் போன்ற இலகுரக கட்டமைப்புகளை உருவாக்குவதை உள்ளடக்கியிருந்தால், ஏஏசி பிளாக்ஸ் சிறந்த பொருத்தமாக இருக்கும்.
முடிவாக, ஏரேட்டட் ஆட்டோகிளேவ்டு கான்கிரீட் (ஏஏசி) பிளாக்ஸ் நவீன கட்டுமானச் சூழலில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, செலவு குறைந்த, உயர் செயல்திறன் கொண்ட தீர்வை வழங்குகின்றன. இதனால் அவை தனி வீடு கட்டுபவர்களுக்கும் பெரிய அளவிலான திட்டங்களுக்கும் ஒரு சிறந்த தேர்வாக அமைகின்றன.