Stages of Building New Home Stages of Building New Home

வாட்டர் புரூஃபிங் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம், வகைகள் மற்றும் அதற்கான படிகள்

உங்கள் வீடு என்பது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வெறும் ஒரு உறைவிடம் மட்டுமல்ல. இது உங்களுக்கான பாதுகாப்பான இடம் ஆகும். இது சௌகரியமான மென்மையான மெத்தை போலச் செயல்பட்டு, இயற்கை கூறுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. அதனால் தான், பல தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கும் ஒரு வீட்டைக் கட்டுவதற்காக நீங்கள் அதிக நேரத்தை, பணத்தை மற்றும் ஆற்றலைச் செலவிடுகிறீர்கள்.

இவ்வளவு அக்கறை மற்றும் கவனத்துடன் நீங்கள் கட்டிய வீடு, ஈரத்தன்மை மற்றும் ஸ்லாப் கசிவுகளால் தடைபடக் கூடாது. ஏனெனில், இது உங்கள் வீட்டின் நிலைத்தன்மையைத் தீவிரமாக பாதித்து அதன் ஒட்டுமொத்த வலிமையிலும் சமரசம் செய்துவிடும்.
ஏன் ஈரத்தன்மை தோன்றுகிறது?
ஏன் ஈரத்தன்மை தோன்றுகிறது?

ஈரத்தன்மை தோன்றுவதற்கு ஒன்றிற்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன, முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஏற்படும் ஒரு சிறு குறைபாடும், உங்களின் கட்டமைப்பின் வலிமையைப் பாதிக்கக்கூடும். ஈரத்தன்மைக்கான சில முக்கியக் காரணங்கள்:

1
மோசமான காற்றோட்டம்
2
அறைகளில் பற்றாக்குறையான வெப்பம்
3
சுவர்களின் மோசமான வெப்பக்காப்பு
4
ஈரமான துணிகள்,
செடிகள், சமையல் மற்றும் குளியலறைகள் போன்ற நீர் ஆதாரங்கள்
5
விரிசலடைந்த சுவர்கள், கசியும் கூரைகள் மற்றும் சன்னல்கள்
வழியே மழைநீர் உள்ளே வருதல்
6
சுவர்கள் மற்றும் தரைகள் வழியே
தண்ணீர் ஊறுதல், உயரும் ஈரத்தன்மை என்றும் அழைக்கப்படுகிறது
 
ஸ்லாப் கசிவுகள் என்றால் என்ன?

ஒழுங்கில்லாத சரிவு அல்லது மழை நீர் குழாய்களில் அடைப்பு போன்ற காரணங்களால் கூரை அடுக்குகளில் மழை நீர் சேரும்போது ஸ்லாப் கசிவுகள் ஏற்படுகிறது. மோசமான தரத்தில் உள்ள கான்கிரீட் மேலும் இந்தப் பிரச்சனையை அதிகரிக்கும். சிறிது காலத்திற்குப் பிறகு, தேங்கி நிற்கும் இந்தத் தண்ணீர் கான்கிரீட் வழியே ஊடுருவிப் பதிக்கப்பட்டுள்ள ஸ்டீலில் துருப்பிடிக்க வைத்து, உள்ளே ஈரத்தன்மைக்கு வழிவகுக்கும். இதன் விளைவாக, இது கான்கிரீட்டைச் சிதைத்துவிடும். இந்தப் பிரச்சனையைத் தவிர்ப்பதற்காக, ஸ்லாப் பொருத்தப்படும் பொது அதிகக் கவனம் செலுத்த வேண்டும், மேலும், மழைநீர் குழாய்களின் வழியே தண்ணீர் நன்றாக வழிந்தோட உதவும் வகையில் போதுமான அளவு சரிவு பராமரிக்கப்பட வேண்டும். எந்தவொரு வீட்டிலும் ஸ்லாப் கசிவுகள் ஏற்படலாம், அதனால் தான் உங்கள் வீட்டை நீர் எதிர்ப்புத்திறனுடன் வைத்திருப்பது முக்கியமாகும்.

நீர்க்காப்பு என்றால் என்ன மற்றும்
ஏன் அது முக்கியத்துவம் வாய்ந்தது?
நீர்க்காப்பு என்றால் என்ன மற்றும்
ஏன் அது முக்கியத்துவம் வாய்ந்தது?

நீண்ட காலத்திற்கு உங்கள் வீட்டை நீர் கசிவிற்கு எதிராகப் பாதுகாப்பதற்கான சிறந்த தீர்வு, நீர்க்காப்பு ஆகும். கான்கிரீட் நீர்க்காப்பு என்பது, சுவர்கள், கூரை, தரைகள், முதலியன வழியாகக் கசிவிலிருந்து தண்ணீர் மற்றும் ஈரப்பதத்தைத் தடுக்கும் நீர்க்காப்பு பொருட்களைக் கான்கிரீட்டில் பூசுவது. நீர்க்காப்பு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள, நீர் கசிவு என்பது உண்மையில் ஏன் விரும்பத்தக்கதல்ல என்று பார்ப்போம்:

நீர் கசிவு என்பது வெறும் அழகியல் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல. கவனிக்காமல் விடப்பட்டால், அது சுவர்களில் பூஞ்சை உருவாக வழிவகுக்கும், அது உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும்.
மேலும், தண்ணீர் மின்சார வயர்களை அடைந்தால், அது ஷார்ட் சர்க்யூட்கள் மற்றும் தீப்பிடிப்பதற்கு வழிவகுக்கும். ஈரப்பதம் உங்களுடைய தனிப்பட்ட உடமைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைக் கெடுக்கவும் செய்யக்கூடும்.
மோசமான சூழ்நிலையில், சுவர்கள் அழுகுவது அல்லது அடித்தளம் அமிழ்வது போன்ற தீவிரமான கட்டமைப்பு சேதத்தையும் நீர் கசிவு ஏற்படுத்தக்கூடும். மேலும், சேதத்தைச் சரி செய்வதென்பது சலிப்பூட்டும் மற்றும் அதிகம் செலவாகும் விஷயமாகும்.
 

இதனால் தான் தொடக்கத்திலிருந்தே உங்கள்
வீட்டை நீர் கசிவிலிருந்து பாதுகாப்பது சிறந்ததாகும்.

எங்கு நீர்க்காப்பு செய்யப்பட வேண்டும்?
எங்கு நீர்க்காப்பு செய்யப்பட வேண்டும்?

உங்கள் வீட்டில் வெள்ளத்திற்கான வாய்ப்புள்ள அல்லது தண்ணீருடன் அடிக்கடி தொடர்பில் இருக்கும் பகுதிகளில் கான்கிரீட் நீர்க்காப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். குளியலறைகள் மற்றும் சமையலறைகள் அல்லது கூரை, பால்கனி, வெளிப்புறச் சுவர்கள், அடித்தளம் போன்ற சூழல்வெளிக்கு வெளிப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தண்ணீர் சேமித்து வைக்கப்படும் இடங்கள் இதில் அடங்கும்.

நீர்க்காப்பு தீர்வுகளின் வகைகள்

இன்று பல வகையான நீர்க்காப்பு தீர்வுகள் கிடைக்கின்றன. உங்கள் வீட்டிற்கான சிறந்த தீர்வைக் கண்டுபிடிப்பதற்கு உங்களின் நீர்க்காப்பு ஒப்பந்ததாரரிடம் பேச முயற்சியுங்கள். ஒரு பிரபலமான தீர்வு அல்ட்ராடெக் சீல் & டிரை ஆகும், இது உங்கள் வீட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கான சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நீர்க்காப்பு பொருட்களாகும். அவை, பிளாஸ்டர், காரைக் கலவை மற்றும் கான்கிரீட்டின் மற்றும் அதன் விளைவாக வீட்டின் நீர் எதிர்ப்பு பண்புகளை மேம்படுத்துவதற்காக அவை வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களின் கட்டடங்களில் ஈரத்தன்மையைத் தடுப்பதற்கான சில வழிகளைப் பார்ப்போம்:

1
மென்படல ஈரக்காப்பு
இது ஒரு ஈரக்காப்பை வழங்குகிறது மற்றும் இது ஒரு மலிவான விருப்பத்தேர்வாகும். இதைப் பூசுவதும் உண்மையில் எளிதானதாகும்.
2
மேற்பரப்பு ட்ரீட்மெண்ட்
இந்தத் தீர்வு வெளிப்புற மேற்பரப்புகளை நீர் எதிர்ப்பு பொருட்களைப் பயன்படுத்திப் பதப்படுத்துகிறது
3
காற்றிடைச்சுவர் கட்டுமானம்
உங்கள் வீட்டில் நீர் கசிவதைத் தவிர்ப்பதற்காக ஒரு இடைவெளியை உருவாக்குகிறது என்பது இதன் பொருள் ஆகும். இது கூடுதலாக ஒரு வெளிப்புறச் சுவரைக் கட்டுவதன் மூலம் செய்யப்படுகிறது.

நீர்க்காப்பு செயல்முறையில்
உள்ள படிநிலைகள்

1
நீங்கள் உங்களின் நீர்க்காப்பு பொருளைத் தேர்வு செய்ததும், உங்களின் வீட்டுச் சுவர்களைச் சீராக்குவதற்காகக் கிரைண்டிங் செய்யப்படுகிறது
2
நீர் எதிர்ப்பு அரணில் எந்தவொரு இடைவெளியும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, எந்தவொரு விரிசல்களும் கான்கிரீட் திட்டுகளைப் பயன்படுத்தி நிரப்பப்படும்.
3
நீர்க்காப்பு பொருட்கள் கான்கிரீட்டுடன் நன்றாக இணைந்துகொள்வதற்காகச் சுவர்கள் நன்றாகச் சுத்தம் செய்யப்படுகிறது
4
நீர்க்காப்பின் பூச்சு சுவர்களில் பூசப்படுகிறது

நீர்க்காப்பின் பலன்கள் என்ன?

சுவர்களில் துருப்பிடித்தல் மற்றும் அரிமானத்தைத் தடுப்பதன் மூலம் உங்கள் கட்டமைப்பின் நிலைத்தன்மையை நீர்க்காப்பு அதிகரிக்கிறது. இது பூஞ்சை வளர்வதையும் தடுக்கிறது, இது ஒவ்வாமைகள் அல்லது ஆஸ்துமா தூண்டிகளைத் தவிர்க்கவும் உதவுகிறது. அத்துடன், நீர் சேதத்தின் காரணமாகச் செய்யப்படும் விரிவான பழுதுபார்ப்பை மிச்சப்படுத்த உதவுகிறது, மேலும், உங்கள் சொத்தின் மதிப்பைத் தக்கவைக்கவும் உதவுகிறது.

வீடு கட்டுவதில் இத்தகைய கூடுதல் உதவிக்குறிப்புகளுக்கு, அல்ட்ராடெக் சிமெண்ட்டின் #வீட்டைப் பற்றிய பேச்சு -ஐ பின்தொடரவும்

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்