உங்கள் வீட்டின் கட்டுமானம் என்று வரும்போது, திட்டமிடல் தொடங்கி இறுதிப்பூச்சு வரை, சிந்திக்க வேண்டியது நிறைய உள்ளது. ஆனால் நீங்கள் கட்டுமானச் செயல்முறையுடன் செல்லும்போது, பாதுகாப்பு என்பது நீங்கள் சமரசம் செய்துகொள்ளக் கூடாத ஒன்றாகும்.
இது ஏதாவது கட்டுமானம் நடைபெறும் இடத்தில், பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உங்களுக்கான மிகவும் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும். பணியின் வகையைச் சார்ந்து பாதுகாப்பு கயிறு, பாதுகாப்பு கண்ணாடிகள், தலைப் பாதுகாப்பு கவசம் மற்றும் விழுவதிலிருந்து பாதுகாக்கும் அமைப்பு போன்ற மூறையான பாதுகாப்பு உபகரணம் பணியாளர்களுக்குத் தேவைப்படும்
மின் விபத்துகள் என்பது கட்டுமானம் நடைபெறும் இடங்களில் இறப்புகளுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். உயர்-ஆற்றல் உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், மின்மாற்றிகள் மற்றும் நீளமான கேபிள்களின் பயன்பாடு அதை ஆபத்தானதாக்குகிறது, மேலும், விபத்துகளைத் தவிர்ப்பதற்கு அவை முறையாகக் கையாளப்பட வேண்டும்.
தலைக்கு மேல் மற்றும் பூமிக்குக் கீழ் உள்ள பரிமாற்றக் கேபிள்கள் மற்றும் பைப்களிலிருந்து ஒரு பாதுகாப்பான தூரத்தைப் பராமரிக்க வேண்டும்.
அனைத்து மின் தயாரிப்புகள் மற்றும் கேபிள்களும் காப்பிடப்பட்டிருக்க வேண்டும். திறந்த நிலையில் உள்ள வயர்கள் எதுவும் இருக்கக்கூடாது.
அனைத்து மின் இணைப்புகளும் த்ரீ-பாயிண்ட் கிரவுண்டிங் பிளக்கைப் பயன்படுத்திக் கிரவுண்டுடன் இணைக்கப்பட வேண்டும்.
மின்சாரப் பயன்பாடு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும், குறிப்பாக ஒன்றிற்கும் மேற்பட்ட எக்ஸ்டென்ஷன்கள் பயன்படுத்தப்படும் போது, ஏற்ற இறக்கங்கள் மற்றும் மிகைச்சுமையைத் தவிர்ப்பதற்கு.
கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கான அணுகல் வரம்பிற்குள் இருக்க வேண்டும், மேலும், பணியாளர்கள், பொருட்கள் மற்றும் இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கட்டுமானம் நடைபெறும் இடத்தில் சாத்தியமான ஆபத்துகளிலிருந்து அண்டை வீட்டார் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை மனதில் வைக்க வேண்டும், மேலும், சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும்
பாதுகாப்பு மற்றும் முறையான கையாளுதலை மனதில் கொண்டு, அனைத்துப் பொருட்கள், குறிப்பாகக் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் உள்ள இரசாயனங்கள் மற்றும் இயந்திரங்கள் எச்சரிக்கையுடன் சேமிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும். பொருட்களைத் தவறாகக் கையாளுவது, குறிப்பாக எளிதில் தீப்பிடிக்கக்கூடியவற்றைத் தவறாகக் கையாளுவது, நெருப்பு, வெடித்தல்கள் மற்றும் தீவிரமான காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
அனைத்தும் திட்டப்படியே நடந்துவிடாது என்பது தான் உண்மை. உங்களின் பகுதியைச் சார்த்து, எதிர்பாராத மழை அல்லது மற்ற பாதகமான சுற்றுச்சூழல் நிலைமைகளுக்குத் தயாராக இருக்கவும், எனவே, கட்டுமானம் நடைபெறும் இடத்தில் இது எந்தவொரு விபத்திற்கும் வழிவகுக்காது.
வீடு கட்டுவதில் இத்தகைய கூடுதல் உதவிக்குறிப்புகளுக்கு, அல்ட்ராடெக் சிமெண்ட்டின் #பட்கார்கி ஐ பின்தொடரவும்
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…