Important Legal Papers While Buying Land

நிலம் வாங்குவதற்கு முன்பு உங்களிடம் இந்த ஆவணங்கள் இருப்பதை உறுதிசெய்யுங்கள்

உங்களின் மனையை வாங்குவது ஒரு வீடு கட்டுவதை நோக்கிய எடுத்து வைக்கும் பெரிய முதல் அடி ஆகும். பிற்காலத்தில் சட்டப் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு, உங்கள் வீட்டின் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன்பு தேவையான அனைத்து ஆவணங்களும் உங்களிடம் இருப்பதை உறுதி செய்துகொள்வது நல்லதாகும்.

தாய் ஒப்பாவணம்

தாய் ஒப்பாவணம் என்பது சொத்தின் உரிமையைத் தீர்மானிப்பதற்கான முக்கியமான ஆவணம் ஆகும். இது நிலத்தின் உரிமை சங்கிலியைக் கண்டுபிடித்து, மனையின் வரலாறு குறித்த தகவல்களை வழங்குகிறது.

பகர அதிகாரப் பத்திரம் (POA)

நிலத்தின் விற்பனையாளர் உரிமையாளர் இல்லை என்றால், மனையை விற்பனை செய்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் வழங்கும் பகர அதிகாரப் பத்திரத்தை அவர்கள் வைத்திருக்க வேண்டும். எப்போதும், ஏதாவது விற்பனையாளரிடமிருந்து வாங்கும் போது பகர அதிகாரப் பத்திரத்தைச் சரிபார்க்கவும்.

விற்பனை ஒப்பாவணம்

விற்பனையாளரிடமிருந்து வாங்குபவருக்கு நிலம் உரிமை மாற்றம் செய்யப்படுவதை விற்பனை ஒப்பாவணம் பதிவு செய்கிறது. நீங்கள் அதைச் சார்பதிவாளர் அலுவலகத்தில் உறுதி செய்து கொள்ளலாம்.

வில்லங்கச் சான்றிதழ் (EC)

நிலம் தொடர்பான பரிவர்த்தனைகள் அனைத்தையும் ஒரு வில்லங்கச் சான்றிதழ் ஆவணப்படுத்துகிறது. நீங்கள் வாங்கும் நிலத்தில் பணம் சார்ந்த அல்லது சட்டம் சார்ந்த கடப்பாடுகள் எதுவும் இல்லை என்பதற்கான சான்றாக இது செயல்படுகிறது.

பட்டா சான்றிதழ்

ஒரு கட்டட உரிமத்தைப் பெறுவதற்கு ஒரு பட்டா சான்றிதழ் அவசியமாகும். இடம், அளவு, கட்டடப் பரப்பு, முதலியன போன்ற சொத்து விவரங்களை இது கொண்டிருக்கும், மேலும், இது சொத்து வரியைச் செலுத்துவதற்கும் கட்டட உரிமத்தைப் பெறுவதற்கும் அவசியமானதாகும்

சரியான சட்ட ஆவணங்கள் அனைத்தையும் வைத்திருப்பது எதிர்காலத்தில் உங்கள் நிலத்தையும் விட்டையும் எந்தவொரு சச்சரவிலிருந்தும் பாதுகாக்க உதவும். ஆவணப்படுத்தல் செயல்முறையின் ஒவ்வொரு படிநிலையிலும் உங்களுக்கு உதவ, ஒரு வழக்கறிஞருடன் கலந்தாலோசிக்கவும்.

உங்கள் வீட்டில் விரிசல்களைத் தவிர்ப்பதற்காக உங்கள் வீட்டின் கட்டுமானத்தின் போது குணப்படுத்துவதற்கான சில குறிப்புகள் இவை. மேலும் இதுபோன்ற உதவிக்குறிப்புகளுக்கு, www.ultratechcement.com ஐப் பார்வையிடவும்
Loading

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்