தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்

hgfghj


எது கான்கிரீட்டில் அரிமானத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அதை எப்படி தடுப்பது

கான்கிரீட் என்பது அதன் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பலத்தின் காரணமாக அதிகமாகப் பயன்படுத்தப்படும் கட்டுமான பொருள் ஆகும். எனினும், அது அரிமானத்தால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எதிரான எதிர்ப்புத்திறன் கொண்டதல்ல என்பதால், அதை எப்படி தவிர்ப்பது என்று அறிந்துகொள்வது அவசியமாகும்.

Share:


அரிமானம் என்பது கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் சார்ந்த சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், கட்டுமான பணி மேற்கொள்பவர்கள் மற்றும் சொத்தின் உரிமையாளர்கள் அரிமானம் ஏற்படுவதற்கான காரணங்களையும், அதை எப்படி தடுப்பது என்பதையும் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

 

இந்த ப்ளாகில், கான்கிரீட்டில் அரிமானம் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும், அதன் தொடக்கத்திற்கான காரணிகள் குறித்தும் நாம் காண்போம். சுற்றுப்புற காரணிகள் முதல் மோசமான கட்டுமான நடைமுறைகள் வரை, மூல காரணங்களைப் புரிந்துகொள்வது திறன்மிக்க தடுப்பு உத்திகளை உருவாக்குவதற்கு அவசியமாகும். எனினும், இந்த கட்டமைப்புகளில் அரிமானத்தைத் தடுப்பதற்கான நடைமுறை படிநிலைகளை நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துவோம். இந்த தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம், உங்கள் கான்கிரீட் கட்டுமானங்களின் நீண்ட ஆயுள் மற்றும் நம்பகத்தன்மையை நீங்கள் உறுதி செய்யலாம், நீண்ட காலத்திற்கு நேரத்தையும் வளங்களையும் சேமிக்கலாம்.



கான்கிரீட் அரிமானத்திற்கான காரணங்கள்



கான்கிரீட் அரிமானம் என்பது பல உட்புற மற்றும் வெளிப்புற காரணிகளால் ஏற்படும் ஒரு சிக்கலான செயல்முறை ஆகும். இந்த காரங்களைப் புரிந்துகொள்வதென்பது திறன்மிக்க தடுப்பு உத்திகளை உருவாக்குவதற்கு முக்கியமானதாகும். கான்கிரீட் கட்டமைப்புகளில் அரிமானத்திற்கான முக்கிய காரணிகளில் சிலவற்றை நாம் காண்போம்:

 

1. தண்ணீர்-சிமெண்ட் விகிதம்



தண்ணீர்-சிமெண்ட் விகிதம் கான்கிரீட்டின் வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையைத் தீர்மானிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தண்ணீர்-சிமெண்ட் விகிதம் அளவுக்கதிகமாக மாறினால் அதன் விளைவாகக் கான்கிரீட்டின் ஊடுருவும் தன்மை அதிகரிக்கும், அதனால் அதில் அதிகமாக தண்ணீர் ஊடுருவி, அரிமானம் ஏற்படலாம். மிகுதியான தண்ணீரானது, குளோரைடு அயனிகள் போன்ற அரிமான காரணிகள் நுழைந்து ரீயின்ஃபோர்ஸ்மெண்ட் ஸ்டீலை அடைவதற்கான வழியாகச் செயல்பட்டு, அரிமான செயல்முறையை வேகப்படுத்துகிறது. சரியான தண்ணீர்-சிமெண்ட் விகிதத்தைப் பராமரிப்பது அரிமானம் ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதற்கு அவசியமானதாகும்.

 

2. கான்கிரீட்டில் ஏற்படும் சுருக்கம்



கான்கிரீட் கியூர் ஆகும்போது, தண்ணீர் ஆவியாவதால் அது சுருங்குகிறது. இந்த சுருக்கம், கான்கிரீட்டில் விரிசல் உண்டாவதற்கு வழிவகை செய்து, அரிமான காரணிகள் ரீயின்ஃபோர்ஸ்மெண்ட் ஸ்டீலை அடைவதற்கு பாதை ஏற்படுத்தி தருகிறது. விரிசல்கள் கட்டமைப்பின் உறுதியைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், கட்டமைப்பை பலவீனப்படுத்தி, அரிமானம் ஏற்பட தொடங்கி பரவுவதை எளிதாக்குகிறது

 

3. மெட்டீரியலின் தரம்

கான்கிரீட் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் மெட்டீரியல்களின் தரம், அரிமானத்திற்கு எதிரான அதன் எதிர்ப்புத்திறனை நேரடியாகப் பாதிக்கிறது. தரக் குறைவான அக்ரிகேட்ஸ் அல்லது போதுமான அரிமான எதிர்ப்புத்திறன் இல்லாத ஸ்டீல் ரீயின்ஃபோர்ஸ்மெண்ட்டைப் பயன்படுத்துவது அரிமானம் ஏற்படுவதை வேகப்படுத்துகிறது. உயர் தரமான மெட்டீரியல்களில் முதலீடு செய்வது கான்கிரீட் கட்டமைப்புகளின் ஆயுளைக் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கலாம்.

 

4. கான்கிரீட்டின் ஊடுருவும் திறன்

ஊடுருவும் திறன் என்பது தண்ணீர் மற்றும் பிற பொருட்கள் கான்கிரீட்டிற்குள் ஊடுருவும் திறனைக் குறிக்கிறது. அதிகமான ஊடுருவல் திறனைக் கொண்ட கான்கிரீட், அரிமான காரணிகளை ஊடுருவவும், ரீயின்ஃபோர்ஸ்மெண்ட் ஸ்டீலை அடையவும் அனுமதிக்கிறது, அரிமானத்தை வேகப்படுத்துகிறது. சரியான கலவை வடிவமைப்பு மற்றும் சேர்மான பொருட்களின் பயன்பாடு கான்கிரீட் ஊடுருவும் திறனைக் குறைத்து அதன் நீடித்து உழைக்கும் திறனை அதிகரிக்கிறது.

 

5. ஈரப்பதம்

ஈரப்பதம் என்பது அரிமான செயல்முறையில் ஒரு முக்கியமான காரணி ஆகும். குறிப்பாக, காற்றில் அதிக ஈரப்பதம் உள்ள பகுதிகள் அல்லது தொடர்ந்து தண்ணீர் படும் பகுதிகள் அரிமானத்தால் பாதிக்கப்படக்கூடும். அரிமான காரணிகள் ரீயின்ஃபோர்ஸ்மெண்ட் ஸ்டீலுடன் எதிர்வினையாற்றி, காலப்போக்கில் அரிமானத்தை ஏற்படுத்தும் வகையிலான சூழலை ஈரப்பதம் உருவாக்குகிறது.

 

6. கான்கிரீட்டின் வலிமை



கான்கிரீட் என்பது இயல்பாகவே வலுவானது என்றாலும், மோசமான வடிவமைப்பு, முறையற்ற கலவை விகிதங்கள், முறையாகக் கியூரிங் செய்யாதது, மற்றும் தவறாக வைப்பது அதன் வலிமையை மோசமாக பாதிக்கலாம். பலவீனமான கான்கிரீட் சேதமடைவதற்கு, விரிசல்கள் விடுவதற்கு மற்றும் இறுதியில் அரிமானம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

 

 

கான்கிரீட் அரிமானத்தை எப்படி தடுப்பது?



கான்கிரீட் அரிமானத்தைத் தடுப்பதென்பது நல்ல கட்டுமான நடைமுறைகள், சரியான மெட்டீரியல் தேர்வு மற்றும் தொடர்ச்சியான பராமரிப்பின் கலவையாகும். செயலூக்கமுள்ள நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், நம் கான்கிரீட் கட்டமைப்புகளை அரிமானத்தால் ஏற்படும் சேதங்களிலிருந்து நம்மால் பாதுகாக்க முடியும். கான்கிரீட்டில் அரிமானத்தைத் தடுப்பதற்கான திறன்மிக்க உத்திகள் சிலவற்றை நாம் காண்போம்:

 

1. கான்கிரீட்டின் தரம்



அரிமானத்தைத் தடுப்பதற்கான ஃபவுண்டேஷன், உயர்தர கான்கிரீட்டைப் பயன்படுத்துவதாகும். சரியான கலவை வடிவமைப்பு, சரியான கியூரிங் நுட்பங்கள் மற்றும் ஏற்ற அக்ரிகேட்ஸைப் பயன்படுத்துவது கான்கிரீட்டின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் அரிமான எதிர்ப்புத்திறனை அதிகரிக்கலாம். நன்கு கட்டமைக்கப்பட்ட கான்கிரீட் கட்டமைப்பு அரிமானத்திற்கு எதிரான முதல் கட்ட பாதுகாப்பாக அமைகிறது.

 

2. எபாக்ஸி பூச்சு



எபாக்ஸி பூச்சு கான்கிரீட் மேற்பரப்புகளுக்கு அற்புதமான பாதுகாப்பு லேயரை வழங்குகிறது. இந்த பூச்சுகள் அரண்களாகச் செயல்பட்டு, அரிமான பொருட்களுக்கு வெளிப்படுவதிலிருந்து கான்கிரீட்டைப் பாதுகாக்கிறது. எபாக்ஸி பூச்சுகள் அரிமானத்தைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் மேம்பட்ட இரசாயன எதிர்ப்பு மற்றும் அழகியல் போன்ற கூடுதல் பலன்களையும் வழங்குகிறது. மேலும், சேதமடைந்த கான்கிரீட்டை சரி செய்து வலுவூட்டி, அதன் ஆயுளை அதிகரிக்க எபாக்ஸி கிரவுட்டைப் பயன்படுத்தலாம்.


3. பாலிமர் ஃபைபர்

கான்கிரீட் கலவையில் பாலிமர் ஃபைபர்களைச் சேர்ப்பது, பொதுவாகக் கான்கிரீட்டில் அரிமான காரணிகள் ஊடுருவுவதற்கான பாதையாக உள்ள சுருக்கத்தினால் ஏற்படும் விரிசல்களைக் கட்டுப்படுத்த உதவலாம். இந்த ஃபைபர்கள் கான்கிரீட்டின் ஒட்டுமொத்த கடினத்தன்மையையும் ஆயுளையும் அதிகரிக்கிறது, அரிமானம் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.

 

4. சரியான வேலைப்பாடு



திறமையான மற்றும் கவனமான கட்டுமான நடைமுறைகள் அரிமானத்தைத் தடுப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, அதுவும் குறிப்பாக கான்கிரீட்டில் உள்ள ஸ்டீலின் அரிமானத்தைத் தடுப்பதற்கு முக்கியமானது. சரியான கெட்டியாதல், ரீயின்ஃபோர்ஸ்மெண்ட்கான போதுமான கவர் மற்றும் கட்டுமானத்தின்போது கவனம் செலுத்துதல் அரிமானத்திற்கு வழிவகுக்கக்கூடிய குறைபாடுகள் மற்றும் விரிசல்களுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

 

5. அரிமானம் ஏற்படாத உலோகங்களைப் பயன்படுத்துதல்

ரீயின்ஃபோர்ஸ்மெண்ட் ஸ்டீலைத் தேர்வு செய்யும்போது, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது எபாக்ஸி பூசப்பட்ட ஸ்டீல் போன்ற அரிமானம் ஏற்படாத அல்லது அரிமான எதிர்ப்புத்திறன் கொண்ட மெட்டீரியல்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த மெட்டீரியல்கள் அரிமானம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழலை எதிர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் கான்கிரீட் கட்டமைப்பின் ஆயுளைக் கணிசமான அளவு அதிகரிக்கிறது.

 

6. பூச்சு பயன்படுத்துதல்

இறுதியில், கான்கிரீட் பூச்சைப் பூசுவது வெளிப்புற சேதம் ஏற்படுத்தும் பொருட்களுக்கு எதிரான கூடுதல் பாதுகாப்பு லேயரை வழங்குகிறது. கான்கிரீட்டில் தண்ணீர் மற்றும் அரிமான காரணிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் அரிமான எதிர்ப்பு பெயிண்ட்கள் முதல் சீலண்ட்கள் வரை இந்த பூச்சுகளில் அடங்கும். இந்த பூச்சுகளைத் தவறாமல் ஆய்வு செய்வது மற்றும் பராமரிப்பது காலப்போக்கில் அவற்றின் திறனை உறுதி செய்யவும், கான்கிரீட்டில் அரிமானத்தைத் தடுக்கவும் அவசியமானதாகும்.



கான்கிரீட் கட்டமைப்புகளில் அரிமானம் ஏற்படுவது காலப்போக்கில் அதன் உறுதியைப் பாதிக்கக்கூடிய தீவிரமான அச்சுறுத்தலாகும். தண்ணீர்-சிமெண்ட் விகிதம், சுருக்கம் மற்றும் மெட்டீரியலின் தரம் போன்ற மூல காரணங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், அரிமானத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்கலாம். எபாக்ஸி பூச்சுகள், பாலிமர் ஃபைபர்கள் மற்றும் சரியான வேலைப்பாடு உள்ளிட்டவை முக்கியமான தடுப்பு நடவடிக்கைகள் ஆகும். இன்று அரிமான தடுப்பிற்காக முதலீடு செய்வது நாளை கான்கிரீட் கட்டுமானங்களின் ஆயுள் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்.



அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1) எந்த கான்கிரீட்டில் அரிமானம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது?

அதிகமான தண்ணீர்-சிமெண்ட் விகிதம், மெட்டீரியல்களின் மோசமான தரம், அதிகமான ஊடுருவும் திறன், மற்றும் பற்றாக்குறையான கியூரிங் செயல்முறை கொண்ட கான்கிரீட்டில் அரிமானம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும், குளோரைடு, சல்ஃபைட் போன்ற அரிமான பொருட்கள் அல்லது தீவிரமான வானிலைக்கு வெளிப்படுத்தப்படக்கூடிய கட்டமைப்புகளும் அதிகமாக பாதிக்கப்படலாம்.

 

2) RCC-இல் அரிமானத்தின் தாக்கம் என்ன?

ரீயின்ஃபோர்ஸ்டு சிமெண்ட் கான்கிரீட்டில் (RCC) ஏற்படும் அரிமானம் அதை விரிவடையச் செய்து, உட்புற அழுத்தம் மற்றும் விரிசலை ஏற்படுத்தி, பாரம் தாங்கும் திறன் மற்றும் கட்டமைப்பின் உறுதியைக் குறைக்கிறது. இது பாரம் தாங்கும் திறனைக் குறைக்கிறது, அழுத்தத்தின் கீழ் மோசமாகச் செயல்படுகிறது மற்றும் இறுதியில் கட்டமைப்பின் உறுதியைப் பாதிக்கிறது.

 

3) கான்கிரீட்டின் நீடித்து உழைக்கும் தன்மையின் மீது அரிமானத்தின் தாக்கம் என்ன?

அரிமானம் கான்கிரீட்டின் ஊடுருவும் திறனை அதிகரித்து, விரிசல் ஏற்பட, உதிர்வு ஏற்பட மற்றும் இறுதியில் நொறுங்கி விழ வழிவகுக்கிறது. இந்த காரணிகள் கான்கிரீட் கட்டமைப்புகளின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் ஆயுளைக் கணிசமாகக் குறைக்கிறது மற்றும் ஆரம்பத்திலேயே பழுது பார்த்தல் அல்லது மாற்றியமைத்தலுக்கான செலவை அதிகரிக்கிறது.

 

4) கான்கிரீட் அரிமானத்தை எந்த உலோகங்களால் தடுக்க முடியும்?

உயர் தரமான அக்ரிகேட்கள் மற்றும் சிமெண்ட், எபாக்ஸி கிரவுட், பாலிமர் ஃபைபர்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போன்ற அரிமானம் ஏற்படாத உலோகங்கள் மற்றும் கான்கிரீட் பாதுகாப்பு பூச்சு உள்ளிட்டவை அரிமானத்தைத் தடுக்கும் மெட்டீரியல்களாகும். கட்டுமானத்தின்போது இந்த மெட்டீரியல்கள் மற்றும் கருவிகளை ஒன்றிணைப்பது நீண்ட காலத்திற்கு அரிமானத்திற்கு எதிரான நல்ல எதிர்ப்புத்திறனை உறுதி செய்கிறது.

 

5) கான்கிரீட்டில் எந்த உலோகத்தில் அரிமானம் ஏற்படும்?

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் கால்வனைஸ்டு ஸ்டீல் போன்ற உலோகங்களின் குறைவான எதிர்வினை ஆற்றலால் கான்கிரீட்டில் அவற்றின் அரிமானம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகும். அவற்றின் அரிமான எதிர்ப்புத்திறன் அவற்றை நீடித்து உழைக்கும் திறன் மற்றும் பராமரிப்பு செலவை மிச்சப்படுத்துவதற்கான சிறந்த தேர்வாக மாற்றுகிறது.


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....