இது வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட சேவையாகும், கூடுதல் செலவில்லாமல், கான்கிரீட்டில் தரம் மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த கான்கிரீட் அமைக்கும்போது தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இந்த சேவை ஒரு தகுதிவாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற சிவில் இன்ஜினியரால் நிர்வகிக்கப்படும் வேன் மூலம் சைட்டில் வழங்கப்படுகிறது. சைட்டில் உள்ள பொருட்களை சோதிக்கத் தேவையான டெஸ்டிங் வசதிகள் / உபகரணங்கள் ஆகியவை வேனில் உள்ளன. கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சைட்டில் சோதிக்கப்படுகின்றன மற்றும் தரமான கான்கிரீட் தயாரிப்பதிற்கான சரியான முறைகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றன / உதவப்படுகின்றன. வலிமை மற்றும் நீடித்த ஆயுளை சமரசம் செய்யாமல் குறைந்த செலவில் கான்கிரீட் கலவை டிசைன்கள் (சிமென்ட், மணல், மெட்டல் மற்றும் நீர் கலந்த கலவை) வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒரு தர உத்தரவாத நடவடிக்கையாக, சைட்டில் உள்ள கான்கிரீட் அதன் ஒட்டுமொத்த வலிமைக்காக சோதிக்கப்படுகிறது மற்றும் டெஸ்ட் ரிப்போர்ட் வாடிக்கையாளருக்கு வழங்கப்படுகிறது. கள ஆய்வு டெமோக்களை நடத்துவதன் மூலம் கவர் ப்ளாக்குகள் மற்றும் மாஸ்க்கிங் டேப்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த சேவையைப் பெற, ஒரு வாடிக்கையாளர் செய்ய வேண்டியது 1800 210 3311 (கட்டணமில்லாது) என்ற எண்ணில் எங்களை அழைக்க வேண்டும்.
This website uses cookies to serve content relevant for you and to improve your overall website
experience.
By continuing to visit this site, you agree to our use of cookies.
Accept
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…
"அல்ட்ராடெக் இந்தியாவின் நம்பர் 1 சிமென்ட் "- விவரங்கள்
Address
"B" Wing, 2nd floor, Ahura Center Mahakali Caves Road Andheri (East) Mumbai 400 093, India
© 2020 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை, அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட்.