கட்டுமான பணிக்கு ஏன் பாலைவன மணல் பயன்படுத்தப்படுவதில்லை

மார்ச் 25, 2019

உங்கள் வீட்டைக் கட்ட கடல் அல்லது பாலைவன மணலை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். இந்த மணல்கள் பளபளப்பான, தெளிவான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன, ஆனால் இவை மிக இலகுவாக தூள் தூளாக இருக்கும். இந்த வகையான மணலைப் பயன்படுத்துவது கட்டமைப்பை பலவீனப்படுத்தலாம். மேலும், கடல் மணலில் உப்பு உள்ளது, இது எஃகு மற்றும் பிளாஸ்டர் மீது எதிர்வினைகளாற்றிவிடும். நீண்ட கால நோக்கில் கண்டால், இந்த மணல்களைப் பயன்படுத்துவது உங்கள் வீட்டின் ஆயுள் மற்றும் வலிமையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சேதம் காரணமாக, சமீபத்திய ஆண்டுகளில் ஆற்று மணலை அதிக அளவில் சுரண்டப்படுவதினை அரசாங்கம் கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளது. குறைவான மணல் விநியோகத்தின் காரணமாக, உங்கள் ஒப்பந்தக்காரர் கடல் அல்லது பாலைவன மணலைப் பயன்படுத்த பரிந்துரைக்கலாம்; தயவுசெய்து அதனை தவிர்க்குமாறு ஆலோசனை கூறுங்கள். கட்டுமானத்திற்கு ஆற்று மணல் அல்லது உற்பத்தி செய்யப்பட்ட மணலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துங்கள்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்