25 மார்ச் 2019
உங்கள் வீட்டில் உள்ள மரக் கட்டமைப்புகளைக் கரையான்களிடமிருந்து பாதுகாப்பாக வைப்பதற்காகக் கரையான் எதிர்ப்பு ட்ரீட்மெண்ட் பயன்படுத்தப்படுகிறது. கரையான் எதிர்ப்பு ட்ரீட்மெண்ட்டின் போது, வீட்டின் கீழே மற்றும் அடித்தளத்தைச் சுற்றி உள்ள மண் ஒரு கரையான் எதிர்ப்பு இரசாயனம் அல்லது பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்திப் பதப்படுத்தப்படும். இது ஏற்கனவே உள்ள கரையான் புற்றுகளை அழித்துவிடும், மேலும், அவை மீண்டும் புற்று கட்டுவதைத் தடுக்கிறது. உங்கள் வீட்டின் கட்டுமானத்தில் கரையான் கட்டுப்பாடு ஏன் முக்கியமானது, மற்றும் அதை எவ்வாறு செய்வது என்பது பற்றி நாம் பார்ப்போம்.
கரையானைக் கட்டுப்படுத்துவது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது
மரக் கட்டமைப்புகளுக்குக் கரையான்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. அவை உங்கள் வீட்டிற்குள் நுழைந்தால், அவை உங்களின் மரச் சாமான்கள், கட்டுமானப் பொருத்துகள் மற்றும் உங்கள் வீட்டின் பிற பகுதிகளுக்குக் கடுமையான தீங்கு விளைவிக்கக்கூடும். கட்டுமானத்திற்கு முன் கரையான் கட்டுப்பாட்டு செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை என்றால், அவை உங்கள் வீட்டின் கீழே புற்றுகளைக் கட்டி காலப்போக்கில் அதிகச் சேதத்திற்கு வழிவகுக்கும். ISI தரவரைவுகளின் கீழ் இந்தியத் தரநிலை குழுவால் இரண்டு கரையான் கட்டுப்பாட்டு இரசாயனங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன: 1 குளோர்பைரிஃபோஸ் 20% EC 2 இமிடாக்ளோப்ரிட் 30.5% SC கட்டுப்படுத்துதல் முக்கியமாகும் மண், அடித்தளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் திரவ வடிவிலான கரையான் எதிர்ப்பு இரசாயனங்களை உட்செலுத்துவதன் மூலம் முன் கட்டுமானக் கரையான் எதிர்ப்பு ட்ரீட்மெண்ட் மேற்கொள்ளப்படுகிறது. கட்டுமானத்திற்குப் பிந்தைய கரையான் எதிர்ப்பு ட்ரீட்மெண்ட்டிற்கு, சுவர்களின் பக்கங்கள் மற்றும் அடி பகுதிகளில் கரையான் கொல்லி பூசப்படுகிறது. சுற்றியுள்ள மண் தோண்டப்பட்டு பதப்படுத்தப்பட வேண்டும், இதன் மூலம் வீட்டைச் சுற்றி ஒரு கரையான் எதிர்ப்பு அரணை உருவாக்கப்படுகிறது.
பயனுள்ள கரையான் எதிர்ப்பு ட்ரீட்மெண்ட்டுக்கான படிநிலைகள் இதோ:
ஆய்வு: முழுவதுமாகச் சோதனை செய்து, கரையான் எதிர்ப்பு இரசாயனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பும் பகுதிகளைக் குறித்து வைத்துக்கொள்ளவும்
மனையிடத் தயாரிப்பு: இரசாயனங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னர்க் கட்டுமான மனையிடத்தைச் சுத்தம் செய்யவும், மேலும், இரசாயனத்தைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்த பகுதியில் எந்தவொரு இடைவெளியும் இல்லாததை உறுதி செய்யவும்.
பயன்பாடு: குறிப்பிட்ட பகுதிகளில் கரையான் கொல்லியின் பரிந்துரைக்கப்பட்ட டோஸ் விகிதம் தொடர்வதை உறுதி செய்யவும்.
கரையான் எதிர்ப்பு ட்ரீட்மெண்ட்டை எப்போதும் ஒரு வல்லுநர் மேற்பார்வையிடுவதை உறுதி செய்யவும். குடிநீருக்கு அருகில் இரசாயனங்கள் பயன்படுத்தப்படாதவாறு கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்.
பின்வரும் காரணங்களால் கரையான் எதிர்ப்பு ட்ரீட்மெண்ட் மேற்கொள்வது மிகவும் முக்கியமாகும்:
இது மிகவும் பயனுள்ளது மற்றும் உங்கள் வீட்டிற்கு உடனடிப் பாதுகாப்பை வழங்குகிறது
இது கரையானுக்கு எதிராக உங்கள் வீட்டைப் பல ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்கும்
திரவ நிலை கரையான் கொல்லிகளை எளிதாகப் பெற முடியும், மேலும், அவை உங்கள் வீட்டின் ஆயுளிற்கான மிக முக்கியமான முதலீடாகும்
கரையான்களால் உங்கள் வீட்டிற்கு ஏற்படும் சேதம் பழைய நிலைக்கு மாற்ற முடியாததாகும். இருப்பினும், சிறிய தொலைநோக்கு பார்வை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நீண்ட காலத்திற்கு உங்கள் வீட்டைக் கரையான்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும்.
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…