March 27, 2019
திட்டமிடலின் போது, கட்டுமானத்தின் வெவ்வேறு நிலைகளைப் பற்றிய சரியான கருத்தைப் பெறுவது முக்கியமானது. அந்த நிலைகளை மனதில் கொள்வது வீட்டைக் கட்டுபவருக்குத் தனது வீட்டையும் நிதியையும் இன்னும் மேலாகத் திட்டமிட உதவும்.
ஒரு தனிநபர் வீட்டைக்கட்டுபவராக இருக்கும் போது அவர் தமது கவனத்தைக் கட்டுமானத்தின் மூன்று நிலைகள் மீது வைக்க வேண்டும். திட்டமிடல், கட்டுதல் மற்றும் முழுமை செய்தல்
திட்டமிடல்: இந்த நிலையில், எந்தக் கட்டுமானமும் நடக்காது ஆனால் இந்த நிலையில் நீங்கள் எதைச் செய்யலாம் எனத் தேர்வு செய்கிறீர்களோ அதுவே உங்கள் செலவுக் கணக்கு வழியான நிதிப் பகிர்வை முடிவு செய்யும், தயாரிப்பை அளித்தல் மற்றும் காலக்கெடு மற்றும் உங்கள் வீட்டின் ஒட்டுமொத்தத் தோற்றமும் இதில் அடங்கும். திட்டமிடலில் வரும் செயல்முறைகள்:
• ஒரு செலவுக்கணக்கை முடிவு செய்தல்
• ஆவணப்படுத்தல்
• கட்டி முடிக்க ஒரு மனையைத் தேர்வு செய்தல்
• உங்கள் குழுவைத் தேர்வு செய்தல்–ஒப்பந்ததாரர், கட்டிடவடிவமைப்பு நிபுணர், உட்புறவடிவமைப்பாளர், தொழிலாளிகள்( நீங்கள் ஒரு ஒப்பந்ததாரரைப் பற்றி சிந்திக்கா விட்டால்)
கட்டுதல்: இந்த நிலையில், உங்கள் வீடு வடிவம் பெறத் துவங்கும் முதல் வேலை கட்டுமானத்துக்குத் தேவையான எல்லா உட்பொருட்களையும் அதாவது சிமெண்ட், மணல், செங்கற்கள், தண்ணீர் மற்றும் திரட்டிகள். உட்பொருட்களை வாங்கியபின் உங்கள் குழு செய்வதாவது:
• அஸ்திவாரம் போடுவது
• உங்கள் சாரத்தைக் கட்டுவது
• பல கலவைகளை உருவாக்குவது
• நீர்புகா அமைப்பை உருவாக்குவது
• சுவருக்குப் பிளாஸ்டரிங் செய்வது
• பிளம்பிங்
• மற்றும் ஒயரிங்
முடிப்பது: இந்த நிலையில், கவனம் வீட்டை அழகுபடுத்துவதில் இருக்கும் மற்றும் உட்புற வடிவமைப்பு இந்த நிலையில் ஒரு முக்கியமான பணியைச் செய்கிறது. உங்கள் குழு கூரை வேய்தல், தரையை அமைத்தல், பெயிண்டிங் மற்றும் பொருத்துகலன்கள் குளியலறை, சமையலறை, வாஷ் பேசின்கள் இவை யாவற்றையும் மேற்பார்வை செய்வார்கள்.
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…