உங்கள் பட்ஜெட்டைக் கண்காணித்து செலவுகளைச் சேமிக்கவும்

மார்ச் 25, 2019

உங்கள் வீட்டைக் கட்டுவதற்கு முன்பும், கட்டும்போதும் பட்ஜெட்டைக் கையாளுவது உங்களுடைய மிகப்பெரிய கவலை ஆகும். உங்களின் பட்ஜெட்டைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்று ஒரு பட்ஜெட் டிராக்கரைப் பயன்படுத்துவதாகும்.

ஒரு பட்ஜெட் டிராக்கர் என்பது பணம் சார்ந்த அனைத்துப் பரிவர்த்தனைகளையும் நீங்கள் கண்காணிப்பதற்கான ஒரு பதிவேடு ஆகும்.

டிராக்கரின் ஒரு பகுதியாக, நீங்கள் பின்வருவனவற்றைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்:

•    திட்டத்தின் ஒட்டுமொத்தச் செலவின் ஆரம்ப மதிப்பீடு (10-15% அவசரக் கால நிதியாக ஒதுக்கி வைக்கவும்)

•    ஒவ்வொரு கட்டுமான நாளின் முடிவிலும், அனைத்துச் செலவுகளையும் அப்டேட் செய்து, மீதம் இருப்பைச் சரிபார்க்கவும்.

•    வாரத்தின் தொடக்கத்தில், அந்த வாரத்திற்கான செலவு மதிப்பீட்டைப் பெற்று, அந்த மதிப்பீட்டு தொகைக்குள் செலவு செய்ய முயற்சி செய்யவும்.

ஒரு விரிவான பதிவேட்டை வைத்துக்கொள்வது, உங்களின் செலவினங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உங்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் கட்டடக் கலைஞர், ஒப்பந்ததாரர் அல்லது பொறியாளருடன் எழக்கூடிய ஏதேனும் சச்சரவுகளுக்கு எதிராகப் பாதுகாக்கவும் உதவுகிறது.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்