உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…
வீட்டில் இருப்பதை உணரும் வகையில் தங்களின் வீடுகளை வடிவமைக்க மக்கள் முயற்சி செய்கின்றனர், மேலும் சரியான வாஸ்த்துவுடன் உள்ள படுக்கையறையானது நீண்ட சோர்வான நாளின் முடிவில் அவர்களுக்கு ஓய்வெடுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்போது அவர்கள் எப்படி உணர்வார்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. இது மட்டுமல்ல, நம் படுக்கையறைகள் உலகை விட்டுத் தள்ளி இருப்பதற்கு மிகவும் அவசியமான இடத்தை நமக்கு வழங்குகிறது, அங்கு நாம் வேலை செய்வது, எழுதுவது, பொழுதுபோக்கில் ஈடுபடுவது முதலியனவற்றைப் போன்ற பல விஷயங்களையும் செய்யக்கூடும். படுக்கையறைக்கான சரியான வாஸ்த்து சாஸ்திரம் என்பது அறையில் உள்ள ஆற்றல் என்னவென்று மட்டுமல்லாமல் நம் ஆரோக்கியம், செல்வம் மற்றும் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாகவும் உள்ளது.
திசை : பிரதானப் படுக்கையறை வாஸ்த்து குறிப்புகளின்படி, படுக்கையறையானது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
பிரதானக் கதவின் நிலை : படுக்கையறையின் கதவு 90 டிகிரியில் திறக்க வேண்டும் என்றும், திறக்கும்போதோ மூடும்போதோ எந்தவொரு சத்தத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்றும், அது கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் இருக்க வேண்டும் என்றும் பிரதானப் படுக்கையறை வாஸ்த்து வழிகாட்டுதல்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
படுக்கையை வைக்கும் முறை : கால்கள் வடக்கு அல்லது கிழக்கு திசையில் இருக்கும் வகையில் தெற்கு அல்லது மேற்கு திசையில் படுக்கையை வைக்க வேண்டும் என்று பிரதானப் படுக்கையறை வாஸ்த்து குறிப்புகளின்படி வாஸ்த்து கோட்பாடுகள் பரிந்துரைக்கின்றன. அதை மூலையில் வைப்பதற்குப் பதிலாக அறையின் மையப்பகுதியில் வைக்க வேண்டும்.
வண்ணம் : பிரதானப் படுக்கையறை வாஸ்த்து வழிகாட்டுதல்களின்படி சாம்பல் நிறம், பச்சை, ரோஸ், மற்றும் நீளம், ஐவரி அல்லது லைட்டான நிறம் உள்ளிட்டவை பிரதானப் படுக்கையறைக்கு ஏற்ற வண்ணங்களாகும்.
வார்ட்ரோபை வைக்கும் முறை : மேற்கு, தென்மேற்கு, அல்லது தெற்கு திசையில் வார்ட்ரோபை வைக்க வேண்டும், ஏனெனில் பிரதானப் படுக்கையறை வாஸ்த்து குறிப்புகளின்படி இந்தத் திசைகள் நேர்மறை ஆற்றலைப் பரப்புகின்றன.
டெக்கர் : சுவரில் இயற்கைக்காட்சிகள் அல்லது கடலின் ஓவியங்களை மாட்ட வேண்டும் என்றும், வன்முறையைச் சித்தரிக்கும் ஓவியங்களைத் தவிர்க்க வேண்டுமென்றும் பிரதானப் படுக்கையறை வாஸ்த்துவின்படி பரிந்துரைக்கப்படுகிறது.
இப்போது உங்களின் படுக்கையறைக்கான சரியான வாஸ்த்துவை நீங்கள் நன்கு அறிந்திருப்பதால், உங்களின் புனிதமான இடத்தை நேர்மறையான மற்றும் அமைதியான அதிர்வுகளால் நிரப்பி, அதை உங்களின் உறைவிடமாக்கிக்கொள்ளுங்கள்.
உங்களின் படுக்கையறையைத் தவிர, கழிவறையிலும் கணிசமான நேரத்தை நீங்கள் செலவிடுகிறீர்கள், மேலும் அங்குதான் நீங்கள் சிந்தனைகளை மேற்கொள்கிறீர்கள். சரியான வாஸ்த்துவைப் பயன்படுத்தி அதைக் கட்டுவதன் மூலம் அது நீங்கள் இருக்க ஏற்ற இடமாக இருப்பதை உறுதி செய்யுங்கள். கழிவறைகளுக்கான வாஸ்த்துவை மேலும் படிக்கவும்.