Stages of Building New Home Stages of Building New Home

புது வீட்டின் கட்டுமானத்தின் கட்டங்கள்

உங்கள் வீட்டைக் கட்டுவது என்பது உங்கள் வாழ்வின் மிகப்பெரிய முடிவுகளில் ஒன்றாகும். உங்கள் வீடு தன் உங்கள் அடையாளம். அதனால் தான் உங்கள் வீட்டுக் கட்டுமானத்தின் ஒவ்வொரு அடியிலும் என்ன செய்யப்பட வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பது முக்கியமாகும். உங்களின் வீடு கட்டும் பயணத்தின் பல்வேறு கட்டங்களை அறிந்திருப்பது முக்கியமாகும், எனவே, உங்கள் புது வீட்டின் கட்டுமானத்தை நீங்கள் திட்டமிடலாம் மற்றும் கண்காணிக்கலாம்

உங்கள் வீட்டின் கட்டுமானத்தைத் திட்டமிடுவது உங்களுக்கும், தோராயமான பட்ஜெட்டிற்கும் உதவியாக மட்டும் இல்லாமல், விலையுயர்ந்த தவறுகளையும் தடுக்கிறது. நீங்கள் உங்கள் வீட்டின் கட்டுமானத்தைச் சரியாகத் திட்டமிடும் போது, பொருட்களின் தரம், உட்புறங்களுக்கான பட்ஜெட்டை நீங்கள் முடிவு செய்து, ஒவ்வொரு கட்டத்திலும் தேவைப்படும் பணப்புழக்கத்தை ஏற்பாடு செய்யலாம்.

அதிர்ஷ்டவசமாக உங்களுக்கு, உங்கள் வீட்டின் கட்டுமானம் குறித்து மேலும் அறிய உதவுவதற்காக இந்தியாவின் no.1 சிமெண்ட் இங்குள்ளது. திட்டமிடல் முதல் முதல் இறுதிப்பூச்சு வரை ஒவ்வொரு கட்டத்திலும் உதவிக்குறிப்புகள் மற்றும் நிபுணரின் அறிவுரையுடன், உங்கள் வீட்டைக் கட்ட நீங்கள் தயாராக இருக்கலாம்.

சிறப்பாகக் கட்டுவதற்காக உங்களுக்கு உதவ,
வீட்டுக் கட்டுமானத்தின் கட்டங்கள் இதோ:

1

இடத்தைத் தயார் செய்வது
மற்றும் அடித்தளமிடுவது

1

இடத்தைத் தயார் செய்வது
மற்றும் அடித்தளமிடுவது

உங்கள் வீட்டைக் கட்டுவதற்கான முதல் அடி, ஒரு வலுவான மற்றும் திடமான அடித்தளத்தை அமைப்பதாகும். முதலில், மனையிடத்திலிருந்து பாறைகள் மற்றும் சிதிலங்கள் அகற்றப்படும். தோண்டத் துவங்குவதற்கு முன்பு, அமைவிடத்திட்ட வரைபடக் குறியிடல்கள் திட்டத்தின் படி இருப்பதை உறுதி செய்யவும். உங்களின் கட்டுமானக் குழு மனையிடத்தை மட்டம் செய்து, அடித்தளம் இடுவதற்காகத் துளைகள் மற்றும் குழிகளைத் தோண்டுவார்கள்.

கான்கிரீட் ஊற்றப்பட்ட பின்னர், அது நன்றாகச் செட் ஆவதற்காக விட்டுவிட்டு, பின்னர் முழுமையாகத் தண்ணீர் ஊற்றப்பட வேண்டும். தண்ணீர் ஊற்றிய பின்னர், நீர்காப்பு மற்றும் கரையான் எதிர்ப்பு ட்ரீட்மெண்ட் செய்வது நல்லது. அல்ட்ராடெக் ILW+ ஓதத்தடுப்புப் பூச்சிற்கு ஏற்றது. பின்னர், அடித்தளச் சுவர்களைச் சுற்றியுள்ள சுவர்களை உங்கள் குழு மண்ணால் மீண்டும் நிரப்ப வேண்டும்.

2

கட்டமைப்பை உருவாக்குதல்

2

கட்டமைப்பை உருவாக்குதல்

அடித்தளம் செட் ஆன பின்னர், வீட்டின் அமைப்பை உருவாக்குவது அடுத்த படிநிலை ஆகும். சன்னல்கள் மற்றும் கதவுகளுடன் சேர்த்துப் ப்லிந்த்கள், பீம்கள், தூண்கள், சுவர்கள், கூரை அடுக்குகள் உள்ளிட்டவற்றை நிறுவுவது இதில் அடங்கும். அறைகள் பிரிக்கப்படும், இது புதிதாகக் கட்டப்பட்ட உங்களுடைய வீடு எப்படித் தோற்றமளிக்கும் என்பதைச் சரியாகக் காட்டும். வீட்டைச் சுற்றி உள்ள பீம்கள் மற்றும் தூண்களைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், அவை தான் கட்டமைப்பின் பெரும்பாலான சுமையைச் சுமக்கவுள்ளன. இது தான் கட்டுமானத்தின் மிக முக்கியமான கட்டம், இது தான் உங்கள் வீட்டின் வலிமை மற்றும் கட்டமைப்பை முடிவு செய்கிறது. எனவே, உங்கள் புது வீட்டின் கட்டுமானத்திற்கு மேற்பார்வையிடுதல் மிகவும் முக்கியமாகும்.

3

குழாய் அமைத்தல் மற்றும் வயரிங்

3

குழாய் அமைத்தல் மற்றும் வயரிங்

உங்கள் வீட்டின் கான்கிரீட் கட்டமைப்பு தயாரான பின்னர், நீங்கள் குழாய் மற்றும் மின்சார அமைப்புகளை நிறுவும் வேலையைத் தொடங்கலாம். உள்ளே நுழைந்த பின்னர், மின்சாரப் பலகைகள் மற்றும் ஸ்விட்சுகள் உங்களுக்கு அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்யவும். மாசுபடுதலைத் தவிர்ப்பதற்காகக் கழிவுநீர் குழாய் எப்போதும் குடிநீர் குழாய்க்குக் கீழே இருக்க வேண்டும். மறைவடக்க மின் வேலைப்பாட்டிற்கு, பிளாஸ்டர் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு வயர்களுடன்கூடிய PVC குழாய்கள் சுவர்களுக்குள் அமைக்கப்படுகின்றன. இது அழகியல் ரீதியாகக் கவர்ச்சியாக மட்டுமில்லாமல், ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் எலிகள் போன்றவற்றிடமிருந்து வயர்களைப் பாதுகாக்கிறது. இது முடிவடைந்ததும், சுவர்களில் பிளாஸ்டர் பூசப்படும்.

4

கதவுகள் மற்றும்
சன்னல்களைப் பொருத்துதல்

4

கதவுகள் மற்றும்
சன்னல்களைப் பொருத்துதல்

சுவர்களில் இறுதி பூச்சு பூசப்பட்டவுடன், கதவுகள் மற்றும் சன்னல்களை நிறுவப்பட வேண்டும். சன்னல்கள் மற்றும் கதவுகள் வெப்பக்காப்பு மற்றும் காற்றோட்டத்தை வழங்குகிறது, எனவே, பயன்படுத்த வேண்டிய சரியான பொருட்கள் குறித்து உங்களின் ஒப்பந்ததாரரிடம் பேசவும்.

5

பூச்சு

5

பூச்சு

இறுதியாக, உங்களின் கட்டுமானக் குழு டைல்களைப் பொருத்துவார்கள், மின்சாரப் பலகைகள், கேபினட்கள், சமையலறை கவுண்டர்டாப்கள், முதலியனவற்றை நிறுவுவார்கள். அனைத்தும் பொருத்தப்பட்டவுடன், உங்கள் வீடு பெயிண்ட் செய்யப்படலாம் அல்லது வால்பேப்பர்களுடன் சேர்த்துப் பிளாஸ்டர் பூசப்படலாம். உங்கள் வீட்டுக்கான இறுதி அலங்காரம் குறித்து உங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கவும்.

நினைவில் கொள்ளவும், வீட்டுக் கட்டுமானத்தின் ஒவ்வொரு கட்டமும் கட்டுப்பாட்டில் உள்ளதை உறுதி செய்வதற்கு மேற்பார்வை மிகவும் அவசியமாகும். முன்னேற்றம் மற்றும் சரக்கிருப்பைச் சரிபார்க்க, மனையிடத்திற்கு நீங்கள் தினமும் செல்ல வேண்டும். உங்கள் புதிய வீட்டின் கட்டுமானத்தின் ஏதாவது கட்டத்தில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், வல்லுநர்களின் ஆலோசனைக்காக அல்லது சரியான கட்டுமானப் பொருட்களைக் கண்டறிவதற்காக உங்களின் அருகாமையில் உள்ள அல்ட்ராடெக் பில்டிங் சொல்யூஷன்ஸ் கடைக்கு நீங்கள் வருகை தரலாம்.

வீடு கட்டுதல் தொடர்பான கூடுதல் உதவிக்குறிப்புகள் மற்றும் ஆலோசனைக்கு அல்ட்ராடெக் சிமெண்டின் #வீட்டைப் பற்றிய பேச்சு -ஐ பார்த்துக்கொண்டிருக்கவும்.

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்