உங்களின் ஒப்பந்ததாரருடன் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின் முக்கியத்துவம்

மார்ச் 25, 2019

உங்களின் ஒப்பந்ததாரரிடமிருந்து பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான சிறந்த முறை, அவரை ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிடச் செய்வதாகும். ஒப்பந்ததாரர் அவரது கால வரிசையைப் பின்பற்றி, சரியான நேரத்தில் வழங்கினால், நீங்கள் உங்களின் பட்ஜெட்டிற்குள்ளேயே இருப்பீர்கள். மேலும், எதிர்காலத்தில் எந்தவொரு சச்சரவுகளையும் தவிர்க்க இது உதவும்.

நீங்கள் ஒப்பந்த ஆவணத்தை உருவாக்குவதற்கு முன்பு, சொந்த வீட்டைக் கட்டியுள்ள உங்களின் உறவினர்கள், பழக்கமானவர்கள் மற்றும் அண்டை வீட்டாருடன் பேசவும். ஒரு ஒப்பந்ததாரருடன் எழக்கூடிய பிரச்சினைகள் குறித்த நுண்ணறிவுகளை அவர்கள் உங்களுக்கு வழங்கக்கூடும். உங்களின் ஒப்பந்தம் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருப்பதை உறுதி செய்துகொள்ளவும்:

•    சேவைகளுக்கான செலவு, அதாவது, ஒப்பந்ததாரர் கட்டணம் மற்றும் பணியாளர் செலவு

•    பணி மற்றும் கால வரிசைகளைச் செயலாக்குதல்

•    கட்டுமானம் நிறைவடையும் தேதி

•    எதிர்பாராத தேவைகளுக்கான தொழில் சார்ந்த நிதிகள்

முடிந்தால், உங்கள் ஆவணத்தைச் சரிபார்க்க ஒரு சட்ட நிபுணரை அணுகிய பின்பு மட்டுமே கையொப்பமிடவும். ஒப்பந்ததாரரும் நீங்களும் கையொப்பமிட்ட பின்னர், ஒப்பந்தத்திற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறவும்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்