நீங்கள் ஒரு வீட்டைத் தனியாகக் கட்ட முடியாது. உங்களுக்கு உதவ - கட்டடக் கலைஞர், பொறியாளர், ஒப்பந்ததாரர் மற்றும் மேசன் உள்ளிட்ட - நிபுணர்களின் திறன்மிகு குழு உங்களுக்குத் தேவைப்படும். நீங்கள் எவ்வளவு நல்ல குழுவைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களோ, அந்த அளவிற்கு வீடு நன்றாக இருக்கும்.
நீங்கள் ஒரு ஒப்பந்ததாரர் அல்லது மேசனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அவர்களின் பணி அனுபவம் குறித்தும் மற்றும் அவர்களின் முந்தைய திட்டங்களைச் சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்தார்களா இல்லையா என்பதைக் குறித்தும் விசாரிக்கவும். உங்களைப் போன்ற ஒரு வீட்டு உரிமையாளர்களிடம் கேட்பது ஒரு நல்ல யோசனை ஆகும்
உங்களுடைய ஒப்பந்ததாரர் மற்றும் மேசனுடன் நீங்கள் கையொப்பமிடும் ஒப்பந்தம், அனைத்துத் திட்டங்களையும், கட்டண விவரங்களையும், அத்துடன் காலநிலையால் ஏற்படும் ஏதேனும் தாமதம் குறித்தும் குறிப்பிட வேண்டும். நினைவில் கொள்ளவும், கையொப்பமிடுவதற்கு முன்பு உங்களின் பொறியாளர் மற்றும் கட்டடக் கலைஞருடனான இறுதி ஒப்பந்தத்தை முழுவதுமாகப் படிக்கவும்.
உங்கள் திட்டத்தை உங்களின் ஒப்பந்ததாரர் மற்றும் மேசன் ஒப்புக்கொள்வதை உறுதி செய்வதற்காக உங்களின் திட்ட விவரங்களை அவர்களிடம் முழுமையாக எடுத்துரைக்கவும். காலவரிசைகள், பொருட்கள், பணியாளர் செலவுகள் மற்றும் ஒட்டுமொத்தப் பட்ஜெட் குறித்துக் கலந்து பேசவும்.
இந்தப் படிநிலைகள் முடிவுற்றதும், நீங்கள் தொடங்கத் தயாராக உள்ளீர்கள். உங்களுடைய புது வீட்டைக் கட்டுவதென்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பாகும், எனவே, அதைச் செய்வதற்கு உங்களுக்கு உதவுவதற்காக ஆட்களைத் தேர்ந்தெடுக்கும்போது, இவற்றை மனதில் வைத்துக்கொண்டு சிறந்ததைத் தேர்ந்தெடுக்கவும்
வீடு கட்டுவது குறித்த கூடுதல் உதவிக்குறிப்புகளுக்கு, அல்ட்ராடெக் சிமென்ட் மூலம் #பாத்கர்கி ஐப் பெறவும்.
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…