உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…
வீட்டிற்குள் நுழைபவர்களின் மனதில் நீண்ட காலத்திற்குப் பதியும் வகையில் நாம் பெரும்பாலும் வீட்டின் உட்புறங்களில் தான் அதிகம் கவனம் செலுத்துகிறோம், ஆனால் வீட்டிற்கு வருகை தருபவர்களுக்கு வீட்டின் வெளிப்புறம்தான் நம் வீட்டைப் பற்றியும், நம் குணத்தைப் பற்றியும் ஒரு நல்ல எண்ணத்தை முதலில் பதியச் செய்யும் என்ற உண்மையை அரிதாகவே நாம் கருத்தில் கொள்கிறோம். வெளிப்புறச் சுவர்களுக்குச் சரியான வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது திகிலூட்டும் மற்றும் பெரும் உணர்ச்சிமிக்க அனுபவமாக இருக்கும், ஏனெனில், நீங்கள் தவறான வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் வீட்டின் வெளிப்புற வண்ணம் மந்தமானதாகவும் சலிப்பூட்டுவதாகவும் தோன்றக்கூடும். நீங்கள் உங்கள் வீட்டின் வெளிப்புறத்திற்கு போல்டான வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தால், அது மிகையான ஒன்றாகத் தோன்றக்கூடும், அத்துடன் அண்டை வீட்டின் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பைப் பாதிக்கக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் உங்களின் வீட்டிற்கான வெளிப்புறப் பெயிண்ட்டின் வண்ணத்தையும், சிறந்த வெளிப்புறப் பெயிண்ட் காம்பினேஷன்களையும் எப்படித் தேர்ந்தெடுப்பதென்று உங்களுக்குத் தெரிந்திருந்தால், உங்கள் வீட்டின் வெளிப்புற வண்ணமானது உங்களின் வீட்டின் அழகைக் கூட்டும்.
உங்களின் வீடு கட்டும் பயணத்தின் மிகவும் உற்சாகமான கட்டங்களில் ஒன்று உங்கள் வீட்டிற்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதாகும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணங்கள் உங்கள் வீட்டின் தோற்றக் கவர்ச்சியைப் பெரிதும் தீர்மானிக்கும். மேலும், வீட்டின் வெளிப்புறப் பெயிண்ட்டின் வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் அவற்றின் கண்ணோட்டங்களைப் பாதிக்கக்கூடிய பல காரணிகள் உள்ளன. எனவே நீங்கள் உங்களின் வண்ணங்களைச் சரியாகத் தேர்ந்தெடுப்பதற்காக மனதில் கொள்ள வேண்டிய சில உதவிக்குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம் :
வல்லுநர்களின் உதவியை நாடவும்
பிழையற்ற பெயிண்டிங் அனுபவத்தைப் பெறுவதற்கான உதவி மற்றும் வழிகாட்டுதலுக்காக அல்ட்ராடெக்கில் உள்ள கட்டிட ஒப்பந்ததாரரைத் தொடர்புகொள்ளவும்.
இந்த வழிகாட்டியின் உதவியுடன், நீங்கள் உங்கள் வீட்டிற்கு ஒரு அழகான வெளிப்புறத்தைப் பெறுவீர்கள், ஆனால் அழகிய உட்புறங்களை எப்படிப் பெறுவீர்கள்? உங்களின் உட்புறங்களுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தைச் சேர்க்க, நீங்கள் வெவ்வேறு வால் ஃபினிஷ்களைச் சோதனை செய்து பார்க்க வேண்டும். மேலும் அறிந்துகொள்ள - ஒரு அழகான உட்புறத்திற்கான சுவர் ஃபினிஷிங்கின் வகைகள் - என்ற ப்ளாகைப் படிக்கவும்.