அடித்தளத்தை அமைக்கும் போது மேற்பார்வை என்பது ஏன் அவசியமான ஒன்று

மார்ச் 25, 2019

வலுவான வீட்டின் இரகசியம் ஒரு வலுவான அடித்தளத்தில் உள்ளது. எனவே, அடித்தளம் அமைப்பதை மேற்பார்வையிடும் போது நீங்கள் விழிப்புடன் இருப்பது அவசியமாகும். உட்புறங்கள் போல் இல்லாமல், அடித்தளத்தை ஒரு முறை அமைத்துவிட்டால், அதை மாற்றமுடியாது.

உங்கள் வீட்டின் அடித்தளமானது, உங்கள் மனையின் மண் (கடினமானது அல்லது மென்மையானது) மற்றும் வீட்டின் உயரத்தைச் சார்ந்தது. நல்ல புரிதலைப் பெறுவதற்கு, உங்களின் கட்டடக் கலைஞரிடம் கலந்தாலோசிக்கவும்.

தொடங்குவதற்கு, மனையிலிருந்து புதர்கள் மற்றும் களைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். சுவர்கள், தூண்களுக்கான அடித்தளக் குறியிடல்கள், அவற்றின் சுமை சுமக்கும் திறனை மேம்படுத்துவதற்காக நன்றாக இடைவெளி விட்டு இருக்க வேண்டும். குழி தோண்டிய பின்னர், ஏதேனும் வெற்றிடம் உள்ளதா என்று உங்களின் ஒப்பந்ததாரரைச் சரிபார்க்கச் செய்து, அவற்றில் கான்கிரீட்டை நிரப்பச் செய்யவும். 

தூண்கள் சரியாக வரிசைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்யவும். இந்தத் தூண்களின் கட்டுமானத்திற்கு பின்னர், மீண்டும் ஏதேனும் வெற்றிடங்களில் நிரப்புவதை உறுதி செய்யவும். அடித்தளத்தில் ஏழு முதல் பதினான்கு நாட்களுக்குத் தண்ணீர் ஊற்றப்படுவதை உறுதி செய்யவும்.

குழி தோண்டிய பிறகு மற்றும் அடித்தளம் அமைப்பது நிறைவடைந்தது கரையான் எதிர்ப்பை மேற்கொள்ளலாம்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்