வெளிப்புற சுவர்களுக்கு எப்படி நிறத்தை தேர்வு செய்வது?

உங்களின் வீடு கட்டும் பயணத்தில் மிகவும் உற்சாகமூட்டும் படிநிலைகள், உங்கள் வீட்டிற்கான நிறங்களைத் தேர்ந்தெடுப்பதாகும். நீங்கள் தேர்வு செய்யும் நிறங்கள் உங்கள் வீட்டின் தோற்றக் கவர்ச்சியைப் பெரிதும் தீர்மானிக்கும். மேலும், வீட்டின் வெளிப்புறப் பெயிண்ட் நிறங்களின் தேர்வு மற்றும் கண்ணோட்டத்தைப் பாதிக்கும் பல காரணிகள் உள்ளன. எனவே, மனதில் வைத்துக்கொள்வதற்காகச் சில உதவிக்குறிப்புகளை நாங்கள் உங்களிடம் கொண்டுவருகிறோம், இதனால் நீங்கள் உங்களின் நிறங்களைச் சரியாகத் தேர்வு செய்யலாம்.

1

 

கலவைகள்: குறைவு தான் அதிகம்

 

1
 

கலவைகள்: குறைவு தான் அதிகம்

நிறைய வண்ணங்கள் பார்ப்பதற்குக் குழப்பும் வகையில் இருக்கும் என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும். உங்கள் வீட்டிற்கு எளிமையாக, ஒன்று அல்லது இரண்டு வெளிப்புற நிறங்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும். அனைத்தும் ஒரேமாதிரியாக இருப்பது போல் உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் அதே நிறத்தின் வெவ்வேறு நிறச் சாயல்களையும் ஆராயலாம்.

2

 

நிறங்களின் தேர்வு

 

2
 

நிறங்களின் தேர்வு

நிறங்களைத் தேர்வு செய்யும் போது, நீங்கள் பல விருப்பத்தேர்வுகளை ஆராய வேண்டும். எந்த நிறங்கள் உங்களுக்குப் பிடித்துள்ளது என்பதை நீங்கள் முடிவு செய்ய முயற்சிக்கும் போதும், கவரக்கூடியவை மற்றும் மேற்கோள்களைப் பார்க்கவும், அதன் பின்னர் அவற்றுக்கான சரியான கலவைகளை முடிவு செய்யவும். எளிதில் அழுக்காகக்கூடிய கருப்பு மற்றும் அடர் நிறங்களைத் தவிர்க்கவும்.

3

 

முக்கியமான காரணி

 

3
 

முக்கியமான காரணி

நிறச்சாயல் அட்டையில் நீங்கள் தேர்வு செய்யும் நிறம் மற்றும் நிறச்சாயல், உங்கள் வீட்டின் வெளிப்புறச் சுவரில் விழும் வெளிச்சத்தின் தரம் மற்றும் வகை சார்ந்து அதில் பூசப்படும் போது மிகவும் வேறுபட்டதாகத் தோற்றமளிக்கும். சுவரில் எப்படி இருக்கும் என்பது குறித்த ஒரு நல்ல யோசனையைப் பெறுவதற்காக, சுவரில் சில நிறங்கள் மற்றும் நிறச்சாயல்களின் மாதிரியை அடித்துப் பார்ப்பது நல்லதாகும்

4

 

சுற்றுப்புறங்கள் முக்கியமானதாகும்

 

4
 

சுற்றுப்புறங்கள் முக்கியமானதாகும்

உங்கள் வீடு இருக்கும் இடம் மற்றும் அதைச் சுற்றி என்ன இருக்கிறது என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். உங்கள் வீடு தனித்துவத்துடன் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பும் அதே வேளையில், உங்களின் சுற்றுப்புறம் மற்றும் பின்னணியின் மனநிலை மற்றும் காலநிலையுடன் ஒத்துப்போகும் அத்தகைய முறையில் நீங்கள் நிறங்களைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்யவும்.

5

 

பெயிண்ட்களுக்கு அப்பாலும் சிந்தியுங்கள்

 

5
 

பெயிண்ட்களுக்கு அப்பாலும் சிந்தியுங்கள்

கதவு மற்றும் சன்னல்கள் மட்டுமல்லாமல் சில அலங்காரங்கள், கலைப்பொருட்கள் மற்றும் செடிகளுடன் உங்கள் வீட்டின் வெளிப்புறம் உண்மையிலேயே உயிரோட்டம் பெறலாம். உங்களின் வெளிப்புற நிறங்களுடன் பொருந்தும் வகையில், சரியான பொருளையும் விளக்குகளையும் தேர்ந்தெடுக்கவும். மேலும், டிரிம்ஸ் மற்றும் அக்சென்ட் நிறங்களுக்கு ஒரு நல்ல நிறக் கலவையைத் தேர்ந்தெடுக்கவும்

6

 

நிலைத்தன்மை

 

6
 

நிலைத்தன்மை

உங்கள் வீட்டின் வெளிப்புறப் பெயிண்ட்டையும் பராமரிப்பது சம அளவு முக்கியமானதாகும். பெயிண்ட்களைத் தேர்வு செய்யும் போது, எந்த நிறமாக இருந்தாலும், நீடித்து உழைக்கக்கூடிய மற்றும் குறைவான பராமரிப்பு தேவைப்படும் பெயிண்ட்களை மட்டும் நீங்கள் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்யவும். பொதுவாக, 'சாட்டின்' மற்றும் 'எக் ஷெல்' பெயிண்ட்கள் அதிக நிலைப்புத்தன்மையை வழங்குகிறது மற்றும் அது சுத்தம் செய்ய எளிதாக உள்ளது. அவை உங்கள் நிறங்களுக்கு ஒரு நல்ல பூச்சை வழங்குகிறது.

உங்கள் வீட்டிற்கான வெளிப்புறப் பெயிண்ட் நிறங்களைத் தேர்ந்தெடுக்கும் போது, இந்த உதவிக்குறிப்புகளை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். உங்கள் வீடு தான் உங்கள் அடையாளம் ஆகும், மேலும், நிறங்கள் உங்களின் உண்மையான பிரதிபலிப்பாக மாறுகிறது.

வீடு கட்டுவதில் இத்தகைய கூடுதல் உதவிக்குறிப்புகளுக்கு, அல்ட்ராடெக் சிமெண்ட்டின் #வீட்டைப் பற்றிய பேச்சு -ஐ பின்தொடரவும்

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்