குழி தோண்டுவது வீட்டின் வலிமையைப் பாதிக்குமா?

ஆகஸ்ட் 25, 2020

ஒரு வீட்டிற்கான அடித்தளத்தை அமைப்பதற்கு முன் மனையில் குழி தோண்டப்படும். அடித்தளம், உங்கள் வீட்டின் கட்டமைப்பின் எடையை அடித்தளத்தின் கீழே உள்ள வலிமை மிகுந்த மண்ணிற்கு இடமாற்றுகிறது. சரியான முறையில் குழி தோண்டப்படவில்லை என்றால், அடித்தளம் வலுவிழக்கக்கூடும், இதன் காரணமாகச் சுவர்கள் மற்றும் தூண்களில் விரிசல்கள் ஏற்படக்கூடும்.

குழி தோண்டும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

  1. குழி தோண்டத் துவங்குவதற்கு முன்பு மனையில் உள்ள அமைவிடத்திட்ட வரைபடக் குறியிடல்கள் சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.
  2. தோண்டப்பட்ட குழியின் அளவு, பேட்டர்ன், ஆழம் மற்றும் சரிவு சமமாக இருப்பதைச் சரிபார்த்துவிட்டு, தோண்டப்பட்ட படுகைகளில் தண்ணீரை ஊற்றித் திமிசுகளைப் பயன்படுத்தி அடித்துக் கெட்டியாக்கத் தொடங்கவும்
  3. கூடுதலாகத் தோண்டப்பட்ட பகுதிகளில் பிளம் கான்கிரீட்டைக் கொண்டு நிரப்பவும். வெற்று இடங்கள் அல்லது மென்மையான பகுதிகள் இல்லாததை உறுதி செய்யவும்
  4. 6 அடிக்கு மேல் ஆழமாகக் குழி தோண்டப்படும் பொது, பக்கங்களில் மரக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி முட்டு கொடுக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.

இவை தான் உங்கள் வீட்டிற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குவதற்கான சரியான குழி தோண்டல் செயல்முறையின் ஒரு சில உதவிக்குறிப்புகள் ஆகும்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்