மார்ச் 25, 2019
நீங்கள் ஒரு மனையை வாங்க முடிவு செய்ததும், நீங்கள் அனைத்து ஆவணங்களையும் வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவும். அவை இல்லாமல், உங்களுடைய கொள்முதல் தாமதமடையும்.
தேவைப்படும் பெரும்பாலான ஆவணங்களை இரண்டு வகைகளின் கீழ்க் கொண்டுவரலாம் - சட்டம் சார்ந்தது மற்றும் தனிப்பட்டது.
சட்ட ஆவணங்கள்: இந்த ஆவணங்கள் அவசியமானதாகும், மேலும், இவற்றில் ஒன்றைத் தவறவிட்டால் கூட அதன் விளைவாகக் கொள்முதல் தாமதமடையும்.
இவற்றில்:-
உரிமை ஒப்பாவணம், விற்பனை ஒப்பாவணம் அல்லது தாய் ஆவணம்: விற்பனையாளரிடமிருந்து பெறப்பட்டது
நில அனுமதி: விவசாய நிலத்தை விவசாயம் சாரா நிலமாக மாற்ற நீங்கள் விரும்பினால்
வில்லங்கச் சான்றிதழ்: நிலம் பதிவு செய்யப்படும் இடத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டது
உரிமைகள் பதிவு (ROR) சான்றிதழ்: தாசில்தார் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டது
பட்டா சான்றிதழ்: உதவி வருவாய் அலுவலரிடமிருந்து பெறப்பட்டது
தனிப்பட்ட ஆவணங்கள்: தனிப்பட்ட ஆவணங்கள் முற்றிலும் சரிபார்த்தல் நோக்கத்திற்காக மட்டுமே: ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் அட்டை.
மனதில் வைத்துக்கொள்ள வேண்டியவை:
விற்பனையாளர் உரிமையாளர் இல்லை என்றால், 'பகர அதிகாரப் பத்திரம்' ஆவணத்தைச் சரிபார்க்கவும்.
விற்பனையாளரால் குறிப்பிடப்பட்டுள்ள அளவீடுகள் துல்லியமானது என்று உறுதி செய்துகொள்ள, நில அளவை துறையிடமிருந்து நிலத்தின் அளவை வரைபடத்தைப் பெறவும்.
ஒன்றிற்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இருந்தால், அனைத்து உரிமையாளர்களிடமிருந்தும் 'விடுவிப்பு சான்றிதழை' பெறுவதை உறுதி செய்துகொள்ளவும்.
உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…