வீடு கட்டுவதற்கான செலவு மதிப்பீட்டு வழிகாட்டி

மார்ச் 25, 2019

உங்களின் சொந்த வீட்டைக் கட்டுவதற்கு, நிதி சார்ந்த திட்டமிடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். செலவு அளவுக்கதிகமாக ஆனதன் காரணமாக உங்கள் வீடு முழுமையடையாமல் இருக்கும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவதை விரும்பமாட்டீர்கள்.

உங்களின் நிதி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல காரணிகள் உள்ளன. எனவே, அண்டை வீட்டார், உறவினர்கள், நண்பர்களிடம் பேசி, அவர்களது ஆரம்பப் பட்ஜெட்டை விட எவ்வளவு அதிகமானது மற்றும் ஏன் அதிகமானது என்பதைக் கண்டறிவது விவேகமான அணுகுமுறை ஆகும்.

நீங்கள் தொடங்குவதற்கு முன், முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணங்களுக்காகப் பணத்தைத் தனியாக ஒதுக்கி வைப்பதை உறுதி செய்துகொள்ளவும்.

உங்கள் கட்டடத்தின் திட்டம் குறித்து உங்களின் ஒப்பந்ததாரரிடம் கலந்து பேசவும். பணி, கட்டுமானப் பொருட்கள் மற்றும் ஒப்பந்ததாரர் செலவுகள் குறித்த யோசனையை இது உங்களுக்கு வழங்கும், மேலும், உங்களின் செலவு தொடர்பான உங்களின் வீட்டுச் செலவினங்களைச் சரிக்கட்டவும் அனுமதிக்கிறது.

நீங்கள் ஒரு எண்ணை முடிவு செய்வதற்கு முன், உட்புறங்களை மறந்துவிடாதீர்கள். குழாய் அமைத்தல், டைல்ஸ் பொருத்துதல், பெயிண்ட் அடித்தல், ஃப்லோரிங் மற்றும் மரச் சாமான்களுக்கான செலவு, உங்களின் மதிப்பீட்டில் சேர்க்கப்பட வேண்டும்.

இறுதியாக, நீங்கள் எதிர்பாராத செலவினங்களுக்காக ஒரு அவசரகால நிதியை வைத்துக்கொள்ளுங்கள்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்