உங்கள் வீட்டிற்கான சிறந்த சிமெண்ட்டைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு விரைவான வழிகாட்டுதல்.

மார்ச் 25, 2019

வீடு கட்டும் செயல்முறையானது பொதுவாகப் பல கட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும், மேலும், பெரும்பாலான அந்தக் கட்டங்களில், சிமெண்ட்டில் உங்கள் தேர்வு ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.

வீடு கட்டுவதற்கு முக்கியமான மூன்று வகை சிமெண்ட்கள் உள்ளன - OPC, PPC மற்றும் PSC. இந்த மூன்றில், OPC எல்லா இடத்திலும் கிடைப்பதை நீங்கள் பார்க்கலாம், ஆனால் PPC மற்றும் PSC நல்ல வலிமையையும், அற்புதமான நிலைப்புத்தன்மையையும் வழங்கும்.

சிமெண்ட்டை வாங்குவதற்கு முன்பு, உற்பத்தி தேதியைச் சரிபார்ப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். சிமெண்ட் பை 90 நாட்களுக்கு மேல் பழையதாக இருந்தால், நீங்கள் உங்களின் பொறியாளரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். நீங்கள் உற்பத்தி தேதியை, MRP மற்றும் ISI முத்திரை போன்ற பிற முக்கியமான விவரங்களுடன் சேர்த்து, பையின் பக்கப்பகுதியில் அச்சிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். சிமெண்ட் பையில் ஏதேனும் கட்டிகள் உள்ளதா என்று ஆய்வு செய்து உறுதி செய்துகொள்ளவும், ஏனெனில், இது சிமெண்ட்டைக் கட்டுமானத்திற்குப் பொருத்தமற்றதாக்கிவிடும்.

சரியான சிமெண்ட்டைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில், விலையின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்கக்கூடாது. பேரம் பேசி, சிறிது காலத்திற்குப் பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக, நீண்ட காலத்திற்கு அதிகப் பணத்தைச் செலவிடும் ஆபத்திற்கு ஆளாகிறீர்கள். நீங்கள் கொள்முதலை மேற்கொள்ளும் போது, புகழ்பெற்ற நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வலுவான வீடு என்பது நிலைத்திருக்கக்கூடிய ஒன்றாகும், சரியான சிமெண்ட்டைத் தேர்ந்தெடுப்பது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.


தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்