தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்

உங்கள் வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியினை (நேர்மறை ஆற்றல்) அதிகரிப்பதற்கான 6 வழிகள்

வாஸ்து சாஸ்திரம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும், இதன் பொருள் 'கட்டிடக்கலை விஞ்ஞானம்' என்பதாகும். இதில் இடம், அமைப்பு, தளவமைப்பு, அளவீடுகள் போன்ற அனைத்து வகையான கட்டடக்கலை மற்றும் வடிவமைப்பு யோசனைகளும் அடங்கும். பாசிட்டிவ் எனர்ஜியை கொண்டுவருவதில் வீட்டின் வாஸ்து முக்கிய பங்கு வகிக்கிறது.


வாஸ்து நிபுணர்கள் வழங்கும் பூஜை அறைக்கான வாஸ்து

பூஜை அறைக்கான வாஸ்து இன்னும் முக்கியமானது, ஏனெனில் இது முழு வீட்டின் ஆற்றல் மற்றும் வாஸ்துவை தீர்மானிக்கிறது. வீட்டின் பூஜை அறையானது வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி மற்றும் உணர்வுகளின் மையம் என்று வாஸ்து வல்லுநர்கள் கூறுகின்றனர், எனவே உங்கள் வீட்டைக் கட்டும் போது பூஜை அறைக்கான வாஸ்து சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.
 

பூஜை அறை வாஸ்துவிற்கான முக்கியத்துவம் 

உங்கள் வீட்டில் தெய்வங்கள் இருப்பதால் தெய்வீக ஆற்றலைப் பரப்புவதால், பூஜை அறை ஒரு வீட்டில் நேர்மறை மற்றும் அமைதியான ஆற்றல்களின் மையமாக செயல்படுகிறது. முழுக்க முழுக்க தெய்வங்களுக்கு என்று ஒரு தனி இடத்தை ஒதுக்குவது, அதாவது  பெரிதோ அல்லது சிறிதோ தனி பூஜை அறை அமைப்பது,உங்கள் வீட்டிற்கு மிகவும் முக்கியமானது மற்றும் அமைதி, நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருவதிலும், எந்த வகையான ஆற்றல் உங்கள் வீட்டில் பரவுகிறது என்பதைத் தீர்மானிப்பதிலும் பூஜை அறை வாஸ்து குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

ஒரு பூஜை அறை வீட்டில் நல்ல அதிர்வுகளை வெளிப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், நீங்கள் தெய்வீக ஆற்றல்களை உணர உதவுகிறது. எதிர்மறை ஆற்றலை அகற்றி, உங்கள் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் நேர்மறையை நிரப்ப வாஸ்து சரியானதாக இருக்க வேண்டும்.

பூஜை அறைக்கான வாஸ்து குறிப்புகள்

வாஸ்து சாஸ்திர கொள்கைகளின்படி பூஜை அறையினை சரியான வாஸ்துபடி அமைப்பதன் மூலம் உங்கள் வீட்டை நேர்மறை மற்றும் தெய்வீக ஆற்றலின் மையமாக மாற்ற உதவும் சில குறிப்புகள் :

  • 1. பூஜை அறையின் நிலை :

  • பூஜை அறைக்கான வாஸ்து படி, பூஜை அறையின் அமைவதற்கா பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு திசையும் ஏதோ ஒரு விசேஷத்தை குறிக்கிறது மற்றும் பிரதிபலிக்கிறது, அதனால்தான் பூஜை அறை கட்டமைக்கப்படும் திசை பூஜை அறை வாஸ்துவின் மிக முக்கியமான பகுதியாகும்.

    • வடகிழக்கு திசை சிவபெருமானின் மண்டலமாக கருதப்படுவதாலும், மிகவும் மங்களகரமானது என்பதாலும் பூஜை அறை அமைக்க உகந்த திசையாக கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து கிழக்கு அல்லது வடக்கு திசைகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. தெற்கு நோக்கிய பூஜை அறை அமைப்பது வாஸ்துபடி மங்களகரமாக கருதப்படுவதில்லை.
    • படிக்கட்டுகளின் கீழ் அல்லது கழிவறைக்கு அருகில் பூஜை அறையினை அமைப்பதை தவிர்க்கவும். இவை  பூஜை அறை அமைப்பதற்கு உகந்த இடங்கள் அல்ல.
    • வாஸ்துபடி தரைதளத்திற்கு கீழ் அல்லது மாடிகளில் பூஜை அறை அமைப்பது நல்லதல்ல என்பதால் அவ்விடங்களில் கட்டமைப்பதை தவிர்த்திடுங்கள்.
    • பூஜை அறையின் கதவு மற்றும் ஜன்னல்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி திறக்கும் வகையில் இருக்க வேண்டும்.
    • பூஜை அறையில், பூஜை அறை வாஸ்து படி நேர்மறை அதிர்வுகளுக்கு பிரமிடு வடிவ சீலிங் அமைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
    • கிழக்கு நோக்கிய வீடுகளுக்கான பூஜை அறை வடக்கு அல்லது கிழக்கு மூலையில் இருக்க வேண்டும் என்று வாஸ்து அறிவுறுத்துகிறது.
Pooja room direction according to Vastu Shastra
  • 2. கடவுள் சிலைகள் அல்லது கடவுள் உருவப்படங்கள் வைக்குமிடம் :

    • பூஜை அறைக்கான வாஸ்து படி, பூஜை அறையில் உள்ள கடவுள் சிலைகள் ஒன்றுக்கொன்று எதிர் எதிரே இருக்கக்கூடாது மற்றும் சுவருக்கு அருகில் இருக்கக்கூடாது.
    • கடவுள் சிலைகளை வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
    • அனைத்து சிலைகளும் ஒரே திசையினை நோக்கி, கதவை நோக்கி கடவுள் சிலைகளின் முகம் பார்க்கும் வகையில் இல்லாததையும் உறுதி செய்ய வேண்டும்.
    • சிலைகள் மீது காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதால் அதனை சுவரின் மீது சாய்த்து வைக்கக் கூடாது.
    • பூஜை அறை வாஸ்து குறிப்புகளின்படி சிலைகள் தரையில் இருந்து குறைந்தது 6 அங்குல உயரத்திலாவது வைக்கப்பட வேண்டும்.
    • இறந்தவரின் படங்களையோ வன்முறையை சித்தரிக்கும் படங்களையோ பூஜை அறையில் வைப்பதைத் தவிர்க்கவும்.
    • கடவுள் சிலைகளின் உடைந்த சில்லுகளாக அல்லது உடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
    • விளக்குகளின் நிலை தென்கிழக்கு திசையினை நோக்கி இருக்க வேண்டும்.
Vastu Shastra Tips for Puja Room
  • 3. புனித பொருட்களை வைக்குமிடம் :

    • பூஜை அறையில், புனிதப் பொருள்கள் மற்றும் பூஜை அறைப் பொருட்களை சேமிப்பதைத் தவிர வேறு எந்த சேமிப்பு நோக்கத்திற்காகவும் பயன்படுத்தக் கூடாது. பூஜை அறையில் எந்த சீர்கேடும் இருக்கக்கூடாது.
    • கடவுள் சிலைகளுக்கு மேல் எந்தப் பொருளையும் வைக்கக் கூடாது.
    • தீபம் மற்றும் அக்னி குண்டம் தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
  • 4. பூஜை அறையில் கேபினெட் வைக்குமிடம் :

    • பூஜை அறையில் அமைக்கப்படும் எந்தவொரு கேபினெட்டும் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும், இதனால் வாஸ்து படி பூஜை அறைக்கு சூரிய ஒளி வருவதில் தடை ஏதும் ஏற்படாது.
    • பிரமிடு வடிவ கோபுரம் அல்லது பெட்டிகள் நேர்மறை அதிர்வுகளை வெளிப்படுத்துவதால் பூஜை பொருட்களை சேமிக்க பிரமிடு வடிவ கேபினெட்கள் அமைக்கலாம்.
    •  வாஸ்து விதிகளின்படி பூஜை அறையில் கடவுள் சிலைகளுக்கு மேல் அலமாரிகள் அமைக்கக்கூடாது.
  • 5. பூஜை அறையின் நிறம் :

    • மங்கிய இயல்பான வண்ணங்கள் நேர்மறை அதிர்வுகளை வெளிப்படுத்துவதால் அவை பூஜை அறைக்கு ஏற்றது, வழிபாடு மற்றும் பிரார்த்தனைக்கும் ஏற்றது.
    •  கிரீம் நிறம் பூஜை அறைக்கு ஏற்ற வண்ணமாகும்.
    • வெளிர் நீலம், வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் போன்ற நிறங்கள் அமைதியான மற்றும் தியான சூழலை உருவாக்குகின்றன.
    • வடகிழக்கு திசையில் உள்ள பூஜை அறைக்கு, வெள்ளை நிறம் சிறந்த நிறமாகும்.
  • 6. பூஜை அறையில் அமைக்கப்படும் லைட்கள் :

    • பகலில் அறை நன்கு வெளிச்சமாக இருக்க பூஜை அறையில் குறைந்தபட்சம் ஒரு ஜன்னலாவது இருப்பது முக்கியம். வாஸ்து படி, இது பூஜை அறைக்கு சூரியனின் நேர்மறை ஆற்றல் மற்றும் அதிர்வுகள் ஊடுருவ அனுமதிக்கிறது.
    •  சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும் அறை நன்கு வெளிச்சமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பூஜை அறையில் போதுமான வெளிச்சத்தை உறுதிப்படுத்த ஒரு விளக்கை ஏற்றி வைக்கவும் அல்லது லைட் பொருத்தி வைக்கவும்.

பூஜை அறை மிகவும் புனிதமானது மற்றும் வாஸ்து கொள்கைகளின்படி அதை கட்டமைப்பது என்பது வீட்டில் மகிழ்ச்சி பரவுவதை உறுதி செய்திடும். உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க பூஜை அறைக்கான இந்த வாஸ்து குறிப்புகள் அனைத்தையும் பின்பற்றுங்கள் மற்றும் உங்கள் புனிதமான மற்றும் மகிழ்ச்சியான வீட்டில் எதிர்மறை சக்திக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்திடுங்கள்.

உங்கள் வீட்டில் வாஸ்துப்படி அமைக்கப்பட்ட வாசல் கதவின் மூலம் வீட்டிற்குள் நுழையும் ஆற்றலை ஒழுங்குபடுத்துங்கள் மற்றும் எதிர்மறை ஆற்றலில் இருந்து உங்கள் வீட்டைப் பாதுகாத்திடுங்கள்.