தலைமை அணி

இயக்குநர்கள் குழு

திரு. குமார் மங்கலம் பிர்லா

திரு. குமார் மங்கலம் பிர்லா

தலைவர்,
அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட்.

ஆறு கண்டங்களில் 35 நாடுகளில் செயல்படும் 48.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பன்னாட்டு ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் திரு. குமார் மங்கலம் பிர்லா ஆவார். அதன் வருவாயில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் அதன் செயல்பாடுகளில் இருந்து வருகின்றன.

திருமதி ராஜஸ்ரீ பிர்லா

திருமதி ராஜஸ்ரீ பிர்லா

நான் - எக்சிகுட்டிவ் இயக்குநர்

திருமதி. ராஜஸ்ரீ பிர்லா அனைத்து முக்கிய ஆதித்யா பிர்லா குழும நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களிலும் இயக்குநராக உள்ளார். ஆதித்யா பிர்லா மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் சமூக முயற்சிகள் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான ஆதித்யா பிர்லா மையத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

எம்எஸ். அல்கா பருச்சா

எம்எஸ். அல்கா பருச்சா

தனி இயக்குநர்

முல்லா & முல்லா &கிரெய்கி பிளண்ட் & கரோவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் எம்எஸ். அல்கா பருச்சா முல்லா. மேலும் 1992 ஆம் ஆண்டு அமர்சந்த் & மங்கல்தாஸுடன் பங்குதாரராக சேர்ந்தார். 2008 ஆம் ஆண்டில், அவர் பருச்சா & பார்ட்னர்ஸை இணைந்து நிறுவினார். ஆரம்பத்தில் இருந்தே, இந்தியாவின் நிறுவனங்களுக்குள் லண்டன் ஆர்எஸ்ஜி கன்சல்டிங்கின் முதல் பதினைந்து தரவரிசைக்குள் இடம் பிடித்தது. பல ஆண்டுகளாக, சேம்பர்ஸ் குளோபல், லீகல் 500 மற்றும் இந்தியாவின் முன்னணி வழக்கறிஞர்கள் யார் யார் ஆகியவற்றால் அல்கா தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார். பருச்சா & பார்ட்னர்ஸில் பரிமாற்ற நடைமுறைக்கு அல்கா தலைமை தாங்குகிறார். இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல், கூட்டு முயற்சிகள், தனியார் பங்கு, வங்கி மற்றும் நிதி ஆகியவை அவரின் நிபுணத்துவத்தின் முக்கிய பகுதிகள். நிதி சேவை வாடிக்கையாளர்களுக்கும், ஆற்றல் மற்றும் தளவாடத் துறையில் உள்ளவர்களுக்கும் செயலாற்றி அல்கா குறிப்பிடத்தக்க அனுபவம் பெற்றவர். சில்லறைவணிகம், பாதுகாப்பு மற்றும் உற்பத்தித் துறையில் முதலீடு செய்யும் உலகளாவிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

திருமதி. சுகன்யா கிருபாலு

திருமதி. சுகன்யா கிருபாலு

சுயாதீன இயக்குநர்

திருமதி சுகன்யா கிருபாலு செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றவர் மற்றும் கல்கத்தாவின் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் மாணவர் ஆவார். அவர் சந்தைப்படுத்தல், மூலோபாயம், விளம்பரம் மற்றும் சந்தை ஆராய்ச்சி போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். நெஸ்லே இந்தியா லிமிடெட், கேட்பரி இந்தியா லிமிடெட் மற்றும் கெல்லாக்ஸ் இந்தியா போன்ற முன்னணி நிறுவனங்களுடன் பணிபுரிவது அவரது அனுபவத்தில் அடங்கும். குவாட்ரா அட்வைசரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த அவர் தற்போது சுகன்யா கன்சல்டிங்கில் இயக்குநராக உள்ளார்.

திரு.கே.கே.மகேஸ்வரி

திரு.கே.கே.மகேஸ்வரி

துணைத் தலைவர் மற்றும் நிர்வாகமற்ற இயக்குநர்

திரு.மகேஸ்வரி ஆதித்ய பிர்லா குழுமங்களில் நீண்டகாலப் பணியிலிருக்கும் உறுப்பினராக பல தொழில், பல நிலப்பரப்புகள், பல கலாச்சாரங்களில் அனுபவம் உள்ளவர், மேலும் குழுமங்களின் நெடுகும் பல வித்தியாசமான பொறுப்புக்களை வகித்தவர். கல்வியில் அவர் ஒரு பட்டயக் கணக்காளர். அவரது 38 வருடத் தொழில்முறை அனுபவத்தில் 3 தசாப்தங்களுக்கு மேல் ஆதித்ய பிர்லா குழுமத்தில் பணியாகும். திரு.மகேஸ்வரி இலாபம் மற்றும் மதிப்பு மையமாய் பல தொழில்களில் விரிவான அனுபவம் பெற்றவர். குழுமத்தின் விஎஸ்எஃப் தொழிலின் வெற்றிக்கு வரைபடம் தந்தவர் அவரே. அதற்கு ஒரு நிலைக்கும் மாதிரியைத் தந்து, இந்தியா மற்றும் பிற நாடுகளில் க்ரீன்ஃபீல்ட் மற்றும் பிரவுன்ஃபீல்ட் விரிவாக்கத்துக்கு வழிகாட்டியவர். அவர் தமது பணியில் வலுவான செய்து முடிக்கும் முனைப்பைக் கொண்டு வந்தவர். மேலும் புத்தாக்கம் மற்றும் புதிய தயாரிப்புக்களின் வளர்ச்சிக்கு வலிமை சேர்த்தவர்.

திரு.அதுல் தகா

திரு.அதுல் தகா

முழுநேர இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரி

திரு. அதுல் தகா அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெடின் முழுநேர இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரி ஆவார். அல்ட்ரா டெக் குழுமங்களில் அவர் எடுத்துள்ள முன்னெடுப்புகளில் குறிப்பித்தக்கவை முதலீட்டாளர் நல்லுறவுக்கு ஒரு வலுவான தளத்தை உருவாக்கியது, எம் அண்ட் ஏ எனப்படும் நிறுவங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதலில் இருக்கும் வாய்ப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் உள்நாட்டு நிதிச்சந்தைகளில் நீண்ட நாள் கடன்களை திட்டமிடுவதில் திறன்மதிப்புகளை வகுத்தது ஆகியவை ஆகும். கல்வியில் அவர் ஒரு பட்டயக் கணக்காளர். அவரது 29 வருடத்துக்கும் அதிகமான தொழில்முறை அனுபவத்தில் 2 தசாப்தங்களுக்கு மேல் ஆதித்ய பிர்லா குழுமத்தில் பணியாகும். அவர் 1988ல் ராஜஸ்ரீ சிமெண்ட் நிறுவனத்தில் பொறுப்பேற்றார், அது இண்டியன் ரெயான் லிமிடெட்டின் ஒரு பகுதியாக இருந்த காலமாகும். அவர் அமரர் ஆதித்ய பிர்லாவின் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றியவர். அப்பணியில் அவர் சிமெண்ட், அலுமினியம், கார்பன் பிளாக் மற்றும் விஎஸ்எஃப் மற்றும் ரசாயனப் பிரிவுகளில் அணுக்கமாகப் பணி புரிந்தார். திரு.தகா ஆதித்ய பிர்லா மேனேஜ்மெண்ட் கார்ப்பொரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவன குழும நிதிக்குழுவுடன், கார்பொரேட் மேனேஜ்மெண்ட் இன்ஃபொர்மேஷன் சிஸ்டம்ஸின் தொகுமுதலீடு உரிமையாளர் நிலையில் பணி புரிந்தவர். 2007ல், புதிதாய் உருவான ஆதித்ய பிர்லா ரிடெய்ல் லிமிடெட் நிறுவனத்தின் நிதி செயற்பாடுகளின் தலைமைப் பொறுப்புக்கு மாறினார். 2010ல் தலைமை நிதி அலுவலராகப் பொறுப்பேற்ற அவர் வலுவான ஒரு அணியை உருவாக்கினார். 2014ல் திரு.தகா அல்ட்ரா டெக் சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலராகப் பொறுப்பேற்றார்.

திரு.அருண் ஆதிகாரி

திரு.அருண் ஆதிகாரி

தனி இயக்குநர்

அருண் அதிகரி கான்பூரின் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கல்கத்தாவின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் மேம்பட்ட மேலாண்மை திட்டத்திலும் பயின்றுள்ளார். 1977 ஆம் ஆண்டில் இந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனத்தில் மேலாண்மைப் பயிற்சியாளராக சேர்ந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் யூனிலீவர் குழுமத்தில் பணியாற்றினார். உத்தி, கார்ப்பரேட் மேம்பாடு, விற்பனை, நுகர்வோர் ஆராய்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல், ஆகியவற்றோடு பொது மேலாண்மை தலைமைப் பங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கியது அவரது பொறுப்புகள். அவர் யூனிலீவரில் இருந்து 2014 ஜனவரியில் ஓய்வு பெற்றார்.

திரு சுனில் துக்கல்

திரு சுனில் துக்கல்

தனி இயக்குநர்

திரு. துக்கல், பிலானியில் இருக்கும் பிஐடிஎஸ்ஸில் இளங்கலை தொழில்நுட்பம் ஆனர்ஸ் (எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்) பட்டம் பெற்றவர். மற்றும் கல்கத்தாவின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் வணிக மேலாண்மை (சந்தைப்படுத்தல்) முதுகலை டிப்ளோமா பெற்றவர். திரு. துக்கல் 1994 இல் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் சேர்ந்தார் மற்றும் 2002 முதல் 2019 வரை 17 ஆண்டுகள் எஃப்எம்சிஜி மேஜரின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார். எஃப்எம்சிஜி மேஜரின் நீண்ட கால தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனார். திரு. துக்கால் இந்தோ-துருக்கிய ஜேபிசி மற்றும் உணவு பதப்படுத்துதலுக்கான ஃபிக்கி கமிட்டி போன்ற பல குழுக்களுக்குத் தலைமை தாங்கினார். ஆண்டின் எஃப்எம்சிஜி சிஇஓ வாக மூன்றுமுறையும், இந்தியாவின் முன்னணி வளம் உருவாக்குபவர்களில் ஒருவராகப் பலமுறையும் பாராட்டப்பட்டு எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர். வணிகம் மற்றும் சமூகப் புலங்களில் செய்த சாதனைகளுக்காக 2019 ஆம் ஆண்டு கொல்கத்தா இந்திய மேலாண்மை நிறுவனத்தால் மதிப்பு மிக்க முன்னாள் மாணவராக மரியாதை செலுத்தப்பட்டார்.

Mr. S B Mathur

திரு எஸ் பி மாத்தூர்

சுயாதீன இயக்குநர்

எஸ் பி மாத்தூர் ஒரு பட்டய கணக்காளர் ஆவார், அவர் ஆகஸ்ட், 2002 முதல் 2004 அக்டோபர் வரை இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) தலைவராக பணியாற்றியுள்ளார். இப்போது அவருக்கு ஆயுள் காப்பீட்டுக் குழுவின் முன்னாள் அலுவலர் பொதுச் செயலாளர் என்ற மரியாதை உண்டு. அவர் பல்வேறு நிறுவனங்களின் குழுவில் உள்ளார். அரசாங்க அமைப்புகள், அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் அறங்காவலர்கள், ஆலோசனை / நிர்வாகப் பாத்திரங்களையும் அவர் வகிக்கிறார்.

Mr. K. C. Jhanwar

திரு. கே. ஜான்வார்

நிர்வாக இயக்குனர்

திரு. ஜான்வார் 37 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு பட்டய கணக்காளர், அதில் 34 ஆண்டுகள் ’ஆதித்யா பிர்லா குழுமத்தில் இருந்துள்ளார். க்ரீன்ஃபீல்ட் மற்றும் பிரவுன்ஃபீல்ட் விரிவாக்கங்கள் உட்பட குழுவின் சிமென்ட் மற்றும் கெமிக்கல்ஸ் பிசினஸ் முழுவதும் நிதி, செயல்பாடுகள் மற்றும் பொது நிர்வாகத்தில் பல்வேறு பாத்திரங்களை வகித்துள்ளார்.

மேலாண்மை குழு

திரு. கே. ஜான்வார்

திரு. கே. ஜான்வார்

நிர்வாக இயக்குனர்,
அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட்.

அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. கே. சி. ஜான்வார், ஆதித்யா பிர்லா குழுமத்தின் மூத்த தலைவர் ஆவார். இந்தக் குழுவில் இவரது தொழில்சேவை 38 ஆண்டுகளுக்கும் மேற்பட்டதாகும். தொழில்முறை பட்டயக் கணக்காளரான திரு ஜான்வார், ஆதித்யா பிர்லா குழுமத்தின் சிமென்ட் வணிகத்தில் 1981 ஆம் ஆண்டில் மேலாண்மை பயிற்சியாளராக சேர்ந்தார்.

குழுவிற்குள், சிமென்ட் மற்றும் வேதியியல் துறைகளில் நிதி, செயல்பாடுகள் மற்றும் பொது மேலாண்மை பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார், மேலும் திட்ட மேலாண்மை மற்றும் வணிக திறன்களில் நிபுணத்துவம் பெற்றவர். கையகப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் அவருக்கு குறிப்பிடத்தக்க அனுபவமும் உள்ளது. வாடிக்கையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடனான தனது நெட்வொர்க்கிங் மற்றும் உறவை வளர்ப்பதில் அவர் விதிவிலக்கானவர் மற்றும் வலுவான வணிகத் தனி உரிமையை (பிரான்சைஸ்) உருவாக்கியுள்ளார். அவர் ஒரு திறமையான அணி அமைப்பாளரும், வலுவான மக்கள் தொடர்பு திறன்களையும் கொண்டவர்.

திரு. இ. ஆர். ராஜ் நாராயணன்

திரு. இ. ஆர். ராஜ் நாராயணன்

தலைமை உற்பத்தி அதிகாரி.

திரு. ராஜ் நாராயணன் அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட் நிறுவனத்தின் வணிகத் தலைவர் மற்றும் தலைமை உற்பத்தி அதிகாரி. அல்ட்ராடெக்கில் சேருவதற்கு முன்பு, அவர் க்ளோர் அல்காலி மற்றும் கிராசிம் இண்டஸ்ட்ரீஸின் VFY பிரிவுகளுக்கான குழு நிர்வாகத் தலைவராக இருந்தார். குழுவில் இருந்த மற்ற காலங்களில், அவர் இன்சுலேட்டர்கள் மற்றும் உரங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் வெளிநாட்டு இரசாயன வணிகங்களின் மூத்த தலைவர் பதவிகளை வகித்தார்.

2008 ஆம் ஆண்டில் ஆதித்யா பிர்லா குழுமத்தில் சேருவதற்கு முன்பு, திரு. அவர் லிண்டே கேஸஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் MD, லாங்க்செஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் இன் MD மற்றும் இந்தியாவில் பேயர் கெமிக்கல்ஸ் நாட்டின் தலைவராக பணியாற்றினார்.

அவர் 2018 இல் ஆதித்யா பிர்லா குழுமத் தலைவரின் சிறந்த தலைவர் விருதைப் பெற்றவர். அவர் தகுதியால் ஒரு இரசாயனப் பொறியாளர்.

திரு விவேக் அகர்வால்

திரு விவேக் அகர்வால்

குழு நிர்வாகத் தலைவர், தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி

திரு. விவேக் அகர்வால் அல்ட்ராடெக் சிமெண்டில் வணிகத் தலைவர் மற்றும் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி. திரு. அகர்வால் தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை அல்ட்ராடெக்கின் சிமெண்ட் வணிகத்தில் கழித்தார், பல முக்கியமான பதவிகளை வகித்துள்ளார். அவர் 1993 இல் சிமெண்ட் மார்க்கெட்டிங் பிரிவில் மண்டல மேலாளராக குழுவில் சேர்ந்தார் மற்றும் மண்டல தலைவர் - கிரே சிமெண்ட் தெற்கு போன்ற முக்கிய பதவிகளை வகித்தார். தலைவர், மார்க்கெட்டிங் - பிர்லா ஒயிட்; மற்றும் தலைவர் - ஆர்எம்சி வணிகம்.

திரு அகர்வால் 2010 இல் வாங்கிய ஸ்டார் சிமெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார் மற்றும் அக்டோபர் 2013 இல், சிமெண்ட் வணிகத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக பொறுப்பேற்றார். திரு.அகர்வால் 2017 ல் ஆதித்யா பிர்லா ஃபெல்லோ என்று பெயரிடப்பட்டார், மேலும் 2019 ல் தலைவரின் சிறந்த தலைவர் விருது பெற்றவர். அவர் NIT அலகாபாத்தில் இருந்து B.E. (ஹானர்ஸ்) மற்றும் FMS, டெல்லியில் இருந்து MBA. அவர் வார்டன் பிசினஸ் பள்ளியில் தனது மேம்பட்ட மேலாண்மை திட்டத்தை (AMP) செய்துள்ளார்

திரு அதுல் தாகா

திரு அதுல் தாகா

முழுநேர இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரி

திரு. அதுல் தகா அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெடின் முழுநேர இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரி ஆவார். அல்ட்ரா டெக் குழுமங்களில் அவர் எடுத்துள்ள முன்னெடுப்புகளில் குறிப்பித்தக்கவை முதலீட்டாளர் நல்லுறவுக்கு ஒரு வலுவான தளத்தை உருவாக்கியது, எம் அண்ட் ஏ எனப்படும் நிறுவங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதலில் இருக்கும் வாய்ப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் உள்நாட்டு நிதிச்சந்தைகளில் நீண்ட நாள் கடன்களை திட்டமிடுவதில் திறன்மதிப்புகளை வகுத்தது ஆகியவை ஆகும். கல்வியில் அவர் ஒரு பட்டயக் கணக்காளர். அவரது 29 வருடத்துக்கும் அதிகமான தொழில்முறை அனுபவத்தில் 2 தசாப்தங்களுக்கு மேல் ஆதித்ய பிர்லா குழுமத்தில் பணியாகும். அவர் 1988ல் ராஜஸ்ரீ சிமெண்ட் நிறுவனத்தில் பொறுப்பேற்றார், அது இண்டியன் ரெயான் லிமிடெட்டின் ஒரு பகுதியாக இருந்த காலமாகும். அவர் அமரர் ஆதித்ய பிர்லாவின் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றியவர். அப்பணியில் அவர் சிமெண்ட், அலுமினியம், கார்பன் பிளாக் மற்றும் விஎஸ்எஃப் மற்றும் ரசாயனப் பிரிவுகளில் அணுக்கமாகப் பணி புரிந்தார். திரு.தகா ஆதித்ய பிர்லா மேனேஜ்மெண்ட் கார்ப்பொரேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவன குழும நிதிக்குழுவுடன், கார்பொரேட் மேனேஜ்மெண்ட் இன்ஃபொர்மேஷன் சிஸ்டம்ஸின் தொகுமுதலீடு உரிமையாளர் நிலையில் பணி புரிந்தவர். 2007ல், புதிதாய் உருவான ஆதித்ய பிர்லா ரிடெய்ல் லிமிடெட் நிறுவனத்தின் நிதி செயற்பாடுகளின் தலைமைப் பொறுப்புக்கு மாறினார். 2010ல் தலைமை நிதி அலுவலராகப் பொறுப்பேற்ற அவர் வலுவான ஒரு அணியை உருவாக்கினார். 2014ல் திரு.தகா அல்ட்ரா டெக் சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலராகப் பொறுப்பேற்றார்.

திரு ரமேஷ் மித்ராகோத்ரி

திரு ரமேஷ் மித்ராகோத்ரி

தலைமை மனித வள அலுவலர்

ரமேஷ் மித்ரகோத்ரி ஒரு மனிதவள நிபுணர், நுகர்வோர் பொருட்கள், மின்னணுவியல், பொறியியல் மற்றும் கட்டுமானம், செயல்திறன் பொருட்கள், சிமெண்ட், சில்லறை மற்றும் இரசாயனங்கள் போன்ற பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் சுமார் 35 வருட அனுபவம் கொண்டவர் மற்றும் குடும்பத்திற்கு சொந்தமான மற்றும் நிர்வகிக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்கள் அமைப்புகள் அவர் ஒரு வணிகத்தின் பல்வேறு வாழ்க்கைச் சுழற்சிகளில் நிறுவன மாற்றம் மற்றும் மாற்ற மேலாண்மையில் ஈடுபட்டுள்ளார். வணிகத்தைப் பற்றிய அவரது புரிதல் மற்றும் வரி மேலாளர்களுடனான கூட்டாண்மை ஆகியவை சவாலான காலங்களில் நிறுவனங்களை வெற்றிகரமாக வழிநடத்தியது.

அவர் 2007 ஆம் ஆண்டில் ஆதித்யா பிர்லா குழுமத்தில் சிமெண்ட் வணிகத்தில் மனிதவளத் தலைவராக (மார்க்கெட்டிங் பிரிவு) சேர்ந்தார். 2009 ஆம் ஆண்டில், அவர் ஆதித்யா பிர்லா சில்லறை வணிக நிறுவனத்திற்கு தலைமை மக்கள் அதிகாரியாக சென்றார். 2015 ஆம் ஆண்டில், அவர் குழுத் தலைவராக - ஊழியர் உறவுகளாகச் சுருக்கமாகச் சென்றார், இதன்மூலம் நூற்றாண்டு குழுவை ஏபிஜி வழிகளில் மற்றப் பொறுப்புகளுடன் இணைக்கும் ஆரம்ப வேலைகளை ஒப்படைத்தார். பின்னர் அவர் CHRO - கெமிக்கல், உரங்கள் மற்றும் இன்சுலேட்டர்கள் வணிகமாக சென்றார். நவம்பர் 2016 இல், இந்தக் காலகட்டத்தில் கையகப்படுத்துதல் மற்றும் கரிம வளர்ச்சியின் மூலம் விரைவான விரிவாக்கத்திற்கு உட்பட்ட அல்ட்ராடெக் சிமெண்டிற்கான CHRO ஆக பொறுப்பேற்றார்.

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்